shukra peyarchi 2022
ஜோதிடத்தின் பார்வையில், ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 (ஆகஸ்ட் 07) நேற்று காலை 05:12 மணிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். தற்போது நிகழ்ந்துள்ள பெயர்ச்சியுடன் சேர்த்து ஆகஸ்ட் 31 வரையில் சுக்கிரன் ஐந்து முறை பெயர்ச்சியாகிறார். ஆம், இரண்டாவது முறையாக சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 31, 2022 புதன்கிழமை மாலை 04:09 மணிக்கு சுக்கிரன் பெயர்கிறார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறதா..? ஆம் இதுவரை இல்லாத ஒன்றாக சுக்கிரன் இரண்டு ராசிப் பெயர்ச்சிகள் மற்றும் 3 நட்சத்திரங்களில் பெயர்ச்சி செய்கிறார். இந்த ஐந்து பெயர்ச்சிகளால் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும். யார் அந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க...Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ம் தேதி சூரிய பெயர்ச்சி...யாருக்கு மகிழ்ச்சி..? யாருக்கு ஆபத்து? முழு பலன் உண்டு..
shukra peyarchi 2022
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இதனால், உங்களுக்கு வருமானம் பெருமளவில் உயரும். இந்த நேரத்தில் பல வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். நீங்கள் வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிப்பதில் வெற்றி காண்பீர்கள். இந்த ஒப்பந்தத்தின் நன்மை எதிர்காலத்தில் நன்றாக தெரியும். திருமண மகிழ்ச்சி அதிகரிக்கும்.