AC Buying Guide: ஏசி வாங்கப்போறீங்களா? கண்டிப்பாக 5 விஷயம் முக்கியம்.. இல்லைனா.. கரண்ட் பில் எகிறும்!

Published : Apr 23, 2026, 12:43 PM IST

கோடை வெயில் மண்டையைப் பிளக்கிறது. தமிழ்நாடு, டெல்லி, உ.பி, ராஜஸ்தான் போன்ற பல்வேறு இடங்களில் 44 முதல் 45 டிகிரிக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயில் காரணமாக ஏசி வாங்கும் நினைப்பவர்கள் இந்த 5 விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

PREV
15

விலை குறைவாக இருப்பதால் 2-ஸ்டார், 3-ஸ்டார் ஏசி வாங்குவதை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் ஏசி ஓடும் 5-ஸ்டார் ஏசி தான் சரியான தேர்வாகும். 3000 முதல் 5000 வரை அதிகமாக இருந்தாலும் ஆண்டு இறுதியில் கரண்ட் பில்லை அதற்கு மேல் மிச்சப்படுத்திக் கொடுக்கும்.

25

இன்வெர்ட்டர் ஏசி என்றால் கரண்ட் போனதும் ஓடுக்கின்ற ஏசி என்று நினைக்க வேண்டாம். இதில் ரூம் கூலிங்க ஆனதும் கம்ப்ரசர் ஆஃப் ஆகாது, மெதுவான வேகத்தில் ஓடும். இதனால் கரண்ட் பில் குறையும். நீங்கள் ஏசி அதிகம் பயன்படுத்துவராக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு இன்வெர்ட்டர் ஏசி வாங்கலாம்.

35

10x10 அடி கொண்ட சிறிய ரூமுக்கு 2 டன் ஏசி தேவையில்லை. சிறிய ரூமுக்கு 1 டன், கொஞ்சம் பெரிய ரூமுக்கு (150 சதுர அடி வரை) 1.5 டன், பெரிய ஹாலுக்கு 2 டன் ஏசி வாங்குவது தான் சரி. தவறான சைஸ் ஏசி வாங்கினால், ரூம் கூலிங் ஆகாது, தேவையில்லாம் கரண்ட் பில் எகிறும்.

45

விலை குறைவாக காண்பிக்க வேண்டும் என்பதால் அலுமினியம் காயில் கொண்ட மாடலைத் கொடுக்கலாம். அலுமினியம் காயில் சீக்கிரம் ரிப்பேர் ஆகும். சரி செய்வது கஷ்டம். எப்பவுமே 100% காப்பர் காயில் (Copper Condenser) கொண்ட ஏசியை கேட்டு வாங்குங்கள். இதுதான் ரொம்ப நாள் உழைக்கும், அதிக கூலிங் தரும்.

55

ஏசி வாங்கும் போது, அது எவ்வளவு சத்தம் வருகிறது (Noise Level) என்பதை சோதனை செய்ய வேண்டும். தூங்கும்போது ஏசி சத்தம் போட்டால் தூக்கம் கெடும்.. முக்கியமாக நீங்கள் வாங்குகின்ற பிராண்ட் சர்வீஸ் சென்டர் எந்த ஊரில் உள்ளது என்று பார்க்க வேண்டும். கோடை வெயில் காலத்தில் ஏசி ரிப்பேராகி, மெக்கானிக் நான்கு நாள் கழித்து வந்தால் உங்கள் நிலைமை மோசமாகிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories