White Hair : நரைமுடி பிரச்சனையா? இந்த எண்ணெயை பயன்படுத்துங்க.! ஒரே மாதத்தில் முடி கருகருன்னு மாறிடும்.! நரைமுடிக்கு நிரந்தர தீர்வு.!

Published : Apr 22, 2026, 02:58 PM IST

Home Made Curry Leaves Oil for Hair Growth : நரை முடிப் பிரச்சனையால் கவலைப்படுகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிள் வீட்டு வைத்தியம் இருக்கிறது. கறிவேப்பிலையை வைத்து உங்கள் முடியை மீண்டும் கருப்பாக மாற்றலாம்.  

PREV
15
Home Made Curry Leaves Oil for Hair Growth

பொதுவாக 50 வயதுக்கு மேல் முடி நரைப்பது இயல்பு. ஆனால் இப்போதைய நவீன காலத்தில், சின்ன வயதிலேயே, ஏன் 25 வயது இளைஞர்களுக்குக் கூட முடி நரைத்துவிடுகிறது. இதனால் பலரும் கெமிக்கல் கலந்த டைகளை பயன்படுத்துகிறார்கள். இது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த நரை முடிப் பிரச்சனைக்கு கறிவேப்பிலையை வைத்தே தீர்வு காணலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

25
கறிவேப்பிலை எண்ணெய் காய்ச்சும் முறை

முதலில், கறிவேப்பிலையை நன்றாகக் கழுவி, ஈரம் போக காய வைத்துக்கொள்ளுங்கள். ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். எண்ணெய் சூடானதும், கறிவேப்பிலையை அதில் போட்டு கருப்பாக மாறும் வரை வதக்குங்கள். கறிவேப்பிலை கருப்பானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த எண்ணெய் நன்றாக ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

35
கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தும் முறை

இந்த எண்ணெயை அடிக்கடி உங்கள் முடியில் தடவுங்கள். வேர்க்கால்களில் படும்படி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் மைல்டான ஷாம்பு வைத்து முடியை அலசுங்கள். தேங்காய் எண்ணெயும் கறிவேப்பிலையும் முடிக்கு மிகவும் நல்லது. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால், கொஞ்ச நாட்களில் நல்ல மாற்றம் தெரியும். நரை முடி கருப்பாக மாறத் தொடங்கும். முடிந்தால் இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்துங்கள். கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை முடியை வலுவாக்கும். கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் முடி நீளமாக வளரவும் உதவுகின்றன.

45
மாற்று வழி

கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், செம்பருத்தி, அவுரி இலை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை சிறுசிறு வடைகள் போல தட்டி வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். இரண்டு அல்லதி மூன்று நாட்கள் ஈரப்பதம் போக, நன்றாக காய்ந்த பின்பு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரும்பு சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, எடுத்து வைத்துள்ள காய்ந்த கறிவேப்பிலை வடைகளை அதில் போட்டு நன்றாக காய்ச்சவும். எண்ணையின் நிறம் மாறி வரும் வரை காய்ச்ச வேண்டும். எண்ணெய் சிறிது கருப்பாக மாறிய பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

55
3 மாதங்களில் முடி கருப்பாக மாறும்

இந்த எண்ணையை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டு தினமும் பயன்படுத்தி வரலாம். மறுநாள் காலை சீயக்காய் அல்லது அரப்புத்தூள் தேய்த்து தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி கருப்பாக மாறத் தொடங்கும். இது உடனடியாக தீர்வு தராவிட்டாலும், தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும். சுமார் மூன்று மாதங்களில் உங்கள் முடி கருமையாக மாறுவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories