Aadi Month 2022- Aadi 18: அற்புதங்கள் நிகழும் ஆடிப்பெருக்கின்....சிறப்புகளும், அதன் வழிபாட்டு முறைகள் என்ன..?

First Published | Aug 1, 2022, 5:30 AM IST

Aadi Month 2022- Aadi-18: ஆடி பெருக்கின் சிறப்புகளும், அதன் வழிபாட்டு முறைகளும் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
 

aadi-18:

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிக முக்கியமான மாதங்களில் ஒன்று என்றே கூறலாம். அதாவது ஆடி மாதத்தில் சூரியன் தெற்கு நோக்கி புறப்படுகிறார். ஆடி மாதம் இந்த ஆண்டில் ஜூலை 17 பிறந்தது. ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்கு குறைவு இருக்காது. ஆடி பிறந்தாலே நம்முடைய ஊர்களில் விழாக்கள் களைகட்டும். அம்மன் கோவில் திருவிழாக்கள் முதல் ஆபர்கள் வரை எங்கு பார்த்தாலும், கூட்டம் எகிறும். 

aadi-18:

ஆடி முதல் நாளை ஆதி பண்டிகை என்று கொண்டாடுவார்கள். அதன் பின்னர், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி 18 (ஆடிப் பெருக்கு) என விசேஷங்கள் நிறைந்ததாக மக்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கக்கூடிய அருமையான மாதம். ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு மிகவும் விசேஷமானது மட்டுமல்லாமல் மக்கள் வாழ்வில் ஒளியையும், வளம், நம்பிக்கையை பெருக்குவார் என்பது ஐதீகம்.
 

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...

Tap to resize

aadi-18:

அதன்படி, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி புதன்கிழமை ஆடி 18ஆம் பெருக்குகாவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம். புது வெள்ளம் பெருகுவதால், ஆடி பெருக்கு என முன்னோர்கள் இந்த தினத்தை மிகவும் கோலாகமாக கொண்டாடி வருகின்றனர். 

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...

ஆடி பெருக்கு எப்போது..?

சூரியன் சனியின் பிடியில் இருக்கும் பூசம் நட்சத்திரத்திலிருந்து விடுபட்டு, புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறும் நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18). இதனால் சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது.
 

aadi-18:

ஆடி 18ம் தேதி வழிபாடு..?

ஆடி 18ம் தேதி மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் நீராடி இறைவனை வணங்குவது வழக்கம். இதனால் பயிர்களுக்குத் தேவையான நீர் வளம் கிடைக்கும் என நம்புகின்றனர். இதனால், நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமண தடை நீங்கும். கணவனின் ஆயுள் கூடும். தொழிலில் வெற்றி தேடி வரும். தொழிலில் லாபம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கும். மொத்தத்தில், இந்த மாதத்தில் தொட்டது எல்லாம் பக்தர்களுக்கு வெற்றியாக அமையும்.

aadi-18:

குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கு துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. எனவே, நீங்கள் காலையில் எழுந்ததும் தலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, மஞ்சள் பூசி, உங்கள் வீட்டின் அருகில் துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலில் இந்த பரிகாரம் செய்யலாம். 

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...

Latest Videos

click me!