Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு..இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்...

First Published | Aug 1, 2022, 5:07 AM IST

Horoscope Today- Indriya Rasipalan August 1 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். சிலருக்கு பிரச்சனை வந்து தொல்லை தரும். அப்படி இன்றைய 12 ராசிகளின் என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

 மேஷம்:

இன்று புதிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உங்கள் பணியில் முழு ஈடுபாடுடன் செயல்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுவது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி விஷயத்தில் அதிக அக்கறையுடன் இருங்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஊடகங்கள் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் இருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். 

 மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...

Tap to resize

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்:

ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் வீட்டில் இன்று மகிழ்ச்சியான சூழல் நிலவும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை. ஆரோக்கியம் மேம்படும். உங்கள் பணிச்சுமை அதிகரிப்பால் இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உங்கள் உடல்நிலை சீராக இருக்கும். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்:

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இன்று நீங்கள் பல முக்கிய பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களின் வருகை இருக்கும்.இருப்பினும், எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்படுங்கள்.  
 
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்:
 
இன்று உங்களுக்கு ஆன்மிகம் தொடர்பான பணிகளில் அதிக ஈடுபாடு இருக்கும். வீட்டின் பெரியோர்களின் ஆசியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களுக்கான இன்று அதிர்ஷ்டம் பிறக்கும். திருமணம் காரியங்கள் தடை படலாம். இருப்பினும், பொறுமையாக காத்திருப்பது வெற்றியை தரும். பணிஇடத்தில் தொய்வு ஏற்படலாம். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

 சிம்மம்:

சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் ஆக்கப்பூர்வமான வேலைகளில் உங்கள் திறமைகளை ஈடுபடுத்துங்கள். உங்கள் பிரச்சனைகள் பற்றி நம்பிக்கையான நண்பரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் எதாவது பேசுவது எதிர்மறையான சூழலை உருவாக்கும். இன்று உங்களுக்கு புறக்கணிப்பு அல்லது மன அழுத்தம் ஏற்படலாம். வியாபாரத்தில் மந்தமாக சூழல் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினரிடம் நேரம் செலவிடுங்கள்..

கன்னி:

இன்றைய வேலையின் அதிக கவனமுடன் செயல்படுங்கள். இது உங்களை மேலும் வலுவாக்கும். அதே சமயம் தன்னம்பிக்கையையும், திறமையையும் வளர்த்துக் கொள்வீர்கள். வீட்டின் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். பெரியோர்களின் ஆசியும் ஒத்துழைப்பும் ஆசீர்வாதமாக இருக்கும்.  

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.  நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால், இன்று அந்த விவகாரம் மேலும் சிக்கலாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே கவனமாக இருங்கள் அல்லது தவிர்க்கவும். இன்று உங்களுக்கு தொழிலில் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். தற்போதைய எதிர்மறை சூழ்நிலைகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். 

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்:

விருச்சிகம் ராசியினர் உறவினர்களுடன் நல்லுறவைப் பேணுவதில், சிறப்பான பங்கு இருக்கும். இன்று நீங்கள் தெய்வீக சக்தியால் ஆசீர்வதிக்கப்படுவதைஉணர்வீர்கள். 
இந்த நேரத்தில் கடின உழைப்பு இருக்கும். உங்களின் ஈடுபாட்டால் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.இன்று உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

rasi palan

தனுசு: 

தனுசு, ராசியில் பிறந்தவர்கள், அன்றாட மன அழுத்தத்திலிருந்து விடுபட, பொழுதுபோக்கு தொடர்பான செயல்களில் ஈடுபடுங்கள். இன்று  உடல் மற்றும் மன சோர்வில் இருந்து விடுபடலாம். குடும்ப சூழ்நிலையும் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும். உங்கள் நிதி நடவடிக்கைகளில் அலட்சியமாகவோ அல்லது சோம்பேறியாகவோ இருக்க வேண்டாம்.  

 மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்:

மகரம் ராசியினர் இந்த நேரத்தில் உங்களின் கடின உழைப்பு சிறந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்களின் திறமையும் வேலை செய்யும் திறனும் புதிய வெற்றியை உருவாக்கும். நெருங்கிய உறவினர்களுடனான உறவும் வலுப்பெறும். வருமானத்தை விட அதிக செலவுகள் இருக்கும். மன அழுத்தம் உண்டாகும். உங்களின்  தற்போதைய சூழ்நிலையில்  வியாபாரத்தை சமாளிக்க முடியும்.  

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்:

மீனம் ராசியில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும் . உங்கள் சகிப்புத்தன்மையின் மூலம் பிரச்சனைகளை வெல்வீர்கள். வியாபாரத்தில் படிப்படியாக நிலைமை சீராகும். பொருளாதார நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

 மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...

Latest Videos

click me!