சமையல் அறையை சுத்தம் செய்ய நேச்சுரல் கிச்சன் கிளீனர்....தயார் செய்வது எப்படி? தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

Published : Jul 31, 2022, 02:25 PM ISTUpdated : Jul 31, 2022, 02:27 PM IST

Kitchen Cleaning Tips: உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க, இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி நீங்களே சொந்தமாக வீட்டில் கிச்சன் க்ளென்சர் செய்யலாம்.   

PREV
14
சமையல் அறையை சுத்தம் செய்ய நேச்சுரல் கிச்சன் கிளீனர்....தயார் செய்வது எப்படி? தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..
kitchen cleaning tips

சமையல் அறைதான் நம் வீட்டில் குடும்ப தலைவிகள் அதிகம் பயன்படுத்தும் இடமாகும். மற்ற இடங்களை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். ஆனால், சமையல் அறையை சுத்தம் செய்வது, ஒவ்வொரு நாளும் கடினமான ஒன்றாகும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும். தூய்மையான சமையலறையில் சமையல் செய்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும்.

24
kitchen cleaning tips

அதேபோன்று, உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க ஏன் கடுமையான, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?  இவை உங்கள் உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கிறது. எனவே, உங்கள் சமையலறை இயற்கை வழிமுறைகளில் சுத்தமாகவும், அதில் இருக்கும் பொருட்களையும் எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, உங்கள் பணத்தை மிச்சப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்த, இயற்கை முறையில் நீங்களே சொந்தமாக வீட்டில் கிச்சன்  க்ளென்சர் செய்யலாம்.  அவை எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

34

தேவையான பொருட்கள்:

காய்ச்சிய வெள்ளை வினிகர் - 1 கப்  

தண்ணீர் - 1 கப் 

டீ ட்ரீ எண்ணெய் - 3 சொட்டு 

கிரேப்ஸ் எண்ணெய் - 3 சொட்டு 

44
kitchen cleaning tips

செய்முறை விளக்கம்:

உங்கள் வீட்டில் ஏதேனும் காலியான 'ஸ்பிரே பாட்டில்’ இருந்தால் அதனை எடுத்து வைத்து கொள்ளவும். அதில் வினிகர் மற்றும் தண்ணீர் ஊற்றவும்.

2. அதனுடன், மூன்று சொட்டு டீ ட்ரீ எண்ணெய் மற்றும் மூன்று சொட்டு கிரேப்ஸ் எண்ணெய் ஊற்றி அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். நேரடியாக கிச்சன் மேற்பரப்பில் அல்லது கிச்சன் துண்டு மீது தெளித்து, பகுதியை சுத்தமாக துடைக்கவும். இப்போது உங்களுக்குகே வித்தியாசம் தெரியும். அத்துடன் உங்கள் ஆரோக்கியத்திற்கும் உகந்த ஒன்றாகும். 

Read more Photos on
click me!

Recommended Stories