தற்போதைய இளம் தலைமுறையினர், கடன் சுமை, தனிமை, வறுமை, தொழில் நஷ்ட்டம், வேலை இழப்பு போன்ற காரணங்கள் மனதளவில் பெரிய பாதிப்புகளில் சிக்கியுள்ளார்கள். அதனால், குறிப்பாக இளம் தொழில் வல்லுநர்களுக்கு, இந்த ''ஹைப்ரிட்'' வேலை மாற்றம் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்தில் 20 வயதிற்குட்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால், 2022 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 16 முதல் 24 வயதுடையவர்களில் 64 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்வதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை 25 முதல் 49 வயதுடையவர்களுடன் (65 சதவீதம்) ஆகும். இது 50 வயதுக்கு மேற்பட்டவர்களை விட (48 சதவீதம்) அதிகமாக உள்ளது.