இன்றைய நவீன பழக்கவழக்கம், நம்முடைய வாழ்கை முறையில் பல மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் உடல் எடை அதிகரிப்பு என்பது நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதற்காக, உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்கவேண்டும் என்பதல்ல, சில ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி உடல் எடையினை விரைவாகக் குறைக்கலாம்.
உடலை ஒல்லியாகக் காட்ட உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவற்றில் சிறந்த பெஸ்ட் உடற்பயிற்சி முறை உங்களுக்கு உதவியாக இருக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
34
Weight Control Tips:
ஸ்க்வாட் ஜம்ப்:
தினமும் சுமார் 40 வினாடிகள் செய்யுங்கள். முதலில் ஒன்றரை அடி தூரத்தில் பாதங்களை விரித்து வைக்கவும். உடலின் மேல் பகுதியை நேராக வைத்து, தொடைகளை வளைக்கும் போது கீழே செல்லவும். இப்போது நாற்காலி போன்ற நிலைக்கு வாருங்கள். சுமார் 40 விநாடிகளுக்கு இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்