Health Tips: அடிக்கடி செரிமான பிரச்சனையா? இந்த 9 டீடாக்ஸ் பானங்களை முயற்சி பண்ணி பாருங்க.!

Published : Aug 17, 2025, 05:56 PM ISTUpdated : Aug 17, 2025, 06:02 PM IST

ஆரோக்கியமாக இருக்க உணவு எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அது சரியாக ஜீரணம் ஆவதும் அவ்வளவு முக்கியம். தினமும் காலையில் சில பானங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் செரிமானம் மேம்படும். அவை என்ன, எப்படி தயாரிப்பது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

PREV
18
எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறு, தேன் இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தேன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. வெதுவெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள். இந்த பானம் செரிமான நொதிகளைத் தூண்டுகிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைக் குறைக்கிறது.

28
வெள்ளரிக்காய் மற்றும் புதினா

வெள்ளரியில் வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம் உள்ளது. புதினா அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. வெள்ளரி துண்டுகள், புதினா இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைத்து குடிக்க வேண்டும். வெள்ளரி, புதினா நீர் உடலுக்கு போதுமான நீரை வழங்குவதோடு, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது.

38
ஆப்பிள் சீடர் வினிகர், தேன்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சாப்பிடுவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்பு குடித்தால் நல்லது.

48
இஞ்சி மற்றும் எலுமிச்சை தேநீர்

இஞ்சி, எலுமிச்சை டீ எடை, மன அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. சில இஞ்சி துண்டுகளை 10 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்க்க வேண்டும். இந்த கலவையை குடிப்பதன் மூலம் வயிற்று எரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் குறையும்.

58
கற்றாழை, எலுமிச்சை சாறு

கற்றாழை, எலுமிச்சை சாறு செரிமானத்திற்கு உதவுகிறது. கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு செரிமானத்திற்குத் தேவையான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் புதிய கற்றாழை கூழ், சிறிது எலுமிச்சை சாறு கலந்து எடுத்துக் கொண்டால் போதும்.

68
சோம்பு நீர்

ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பை ஒரு கிளாஸ் தண்ணீரில் முந்தைய நாள் இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். சோம்பு வீக்கம், வாய்வுத் தொல்லைகளைக் குறைக்கிறது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.

78
பச்சை நிற ஸ்மூத்தி

பச்சை ஸ்மூத்திகள் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்துள்ளன. இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. செரிமானத்திற்கு உதவுகின்றன. கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள், தண்ணீர், பால், தயிர் போன்றவற்றைக் கொண்டு பச்சை ஸ்மூத்தி தயாரிக்கலாம்.

88
மஞ்சள் தண்ணீர்

மஞ்சள் தண்ணீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அரை டீஸ்பூன் மஞ்சளை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் போட்டு நன்கு கலந்து குடிக்க வேண்டும். மஞ்சள் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த நீரை குடிப்பதன் மூலம் வாய்வு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் குறையும். செரிமானம் மேம்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories