Cockroach Problem: கரப்பான்பூச்சி தொல்லையா? இந்த 7 செடிகளை வீட்டுல வைங்க போதும்!

Published : Jul 09, 2026, 07:19 AM IST

மழைக்காலத்துல வர்ற ஈரப்பதம் கரப்பான்பூச்சிகளை வீட்டுக்குள்ள வர வைக்கும். ஆனா, நல்ல வாசனை உள்ள இந்த 7 செடிகள் பூச்சிகளை இயற்கையா விரட்டி, காத்தையும் சுத்தப்படுத்தும். இதனால உங்க வீடு மழைக்காலம் முழுக்க ஃப்ரெஷ்ஷாவும், பசுமையாவும் இருக்கும்.

PREV
17
பூச்சிகளை விரட்டும் புதினா

புதினாவோட வசீகர வாசனை, கரப்பான்பூச்சி மற்றும் பிற பூச்சிகளை இயற்கையாகவே விரட்ட உதவும். மழைக்காலத்துல ஜன்னல் அல்லது சமையலறை பக்கத்துல இந்த செடியை வைச்சா, வீடு ஃப்ரெஷ்ஷா இருக்கும், பூச்சிகளும் வராது.

27
நல்லசு செய்யும் லாவெண்டர்
லாவெண்டரோட இதமான வாசனை நமக்கு ரொம்ப பிடிக்கும், ஆனா கரப்பான்பூச்சிகளை இது விரட்டிவிடும். இதோட அமைதியான நறுமணம், மழைக்காலத்துல படுக்கையறைக்கு ஒரு சூப்பரான தேர்வா இருக்கும்.
37
ரோஸ்மேரி வாசம் நம் மனதுக்கு நேசம்
ரோஸ்மேரி செடியில் உள்ள நறுமண எண்ணெய்கள், கரப்பான்பூச்சிகள் வீட்டுக்குள் வர்றதை இயற்கையாவே தடுக்கும். வீட்டுக்குள்ளேயே நல்ல சூரிய ஒளி கிடைச்சா இது சூப்பரா வளரும். மழைக்காலத்துல வீட்டுக்கு ஒரு ஃப்ரெஷ்ஷான மூலிகை வாசனையையும் கொடுக்கும்.
47
லெமன்கிராஸ் இருந்தா ஒரு பூச்சியும் வராதாம்
லெமன்கிராஸ்ல 'சிட்ரோநெல்லா' அதிகமா இருக்கு. இது பூச்சிகளை விரட்டுறதுக்கு பெயர் போனது. மழைக்காலத்துல வீட்டு வாசல் அல்லது பால்கனி பக்கத்துல இதை வைச்சா, தேவையில்லாத பூச்சிகளோட நடமாட்டத்தை குறைக்கலாம்.
57
பிரிஞ்சி இலை செடி - பிரியாணிக்கு மட்டுமல்ல
பிரிஞ்சி இலை செடியிலிருந்து வர்ற ஒருவிதமான வாசனையை கரப்பான்பூச்சிகள் தவிர்க்கும். இந்த செடியை வீட்டுக்குள்ள வளர்க்குறது மூலமா, சமையலுக்கு ஃப்ரெஷ்ஷான இலைகளும் கிடைக்கும், பூச்சிகளையும் விரட்டலாம்.
67
சாமந்தி எனும் பூச்சி விரட்டி

சாமந்தி பூக்களில் 'பைத்ரின்ஸ்'  என்ற இயற்கை ரசாயனம் இருக்கு. இதை பூச்சி விரட்டிகள்ல பரவலா பயன்படுத்துறாங்க. இதோட வண்ணமயமான பூக்கள் மழை நாட்களில் கண்ணுக்கு அழகா தெரியுறதோட, வீட்டு பூச்சிகளிடமிருந்து இயற்கையான பாதுகாப்பையும் கொடுக்கும்.

77
கேட்னிப் இருந்தால் போதும்

கேட்னிப் செடியில் 'நெப்பட்டாலாக்டோன்' என்ற இயற்கை சேர்மம் இருக்கு. இது பல பூச்சிகளை விரட்டுறதா கண்டுபிடிச்சிருக்காங்க. மழைக்காலத்துல, ரசாயனம் இல்லாத ஒரு தீர்வா கரப்பான்பூச்சிகளை விரட்ட இது உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories