உங்க மகளுக்கு 10 வயசு ஆச்சா? அப்ப இந்த '6' விஷயங்களை கண்டிப்பா சொல்லி கொடுங்க!

First Published | Oct 14, 2024, 12:36 PM IST

Parenting Tips : ஒவ்வொரு தாயும் தனது மகளுக்கு 10 வயது ஆன பிறகு சில முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.

Parenting Tips For 10 Year Old Girls

ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் பெண் குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம். பொதுவாக பெண் குழந்தைகள் என்றாலே அந்த வீடு கொண்டாட்டம்தான். ஏன் பலரும் தங்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்காதா? என்று ஏங்குகிறார்கள். அப்படி பெண் குழந்தை பிறந்தால் லட்சுமி தேவியே பிறந்ததாகவும், இனி வீட்டில் செல்வம், செழிப்பு நிறையும் என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை ஒன்று உண்டு.

மகள்கள் அப்பாவின் செல்லம் மகன்கள் அம்மாவின் செல்லம் என்று இப்படி இருந்தால் கூட ஒரு மகளுடைய வாழ்க்கையில் அவளது அம்மாவின் பங்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது. 

Parenting Tips For 10 Year Old Girls

மேலும் ஒவ்வொரு பெண் குழந்தையும் தங்களை அறியாமலேயே தன்னுடைய தாயைப் பார்த்து பல விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். சொல்லப்போனால் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தனது அம்மா எப்போதுமே ஸ்பெஷல் தான்.

அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல வகையான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சின்ன குழந்தைகள் என்று கூட பார்க்காமல் பல இடங்களில் குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் பல பெற்றோர்கள் தங்களது மகள்கள் இந்த சமூகத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்கும் முடியும் என்ற அச்சம் உள்ளது.

Tap to resize

Parenting Tips For 10 Year Old Girls

மகள்கள் வளரும்போது ஒவ்வொரு பெற்றோரும் அவளது கல்விக்காகவும், எதிர்காலத்திற்காகவும் திட்டமிடுகிறார்கள். அந்த வகையில் உங்களது மகள் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வலுவாக இருக்க விரும்பினால் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். 

அதிலும் குறிப்பாக உங்களது மகளுக்கு 10 வயது ஆன பிறகு முக்கியமான சில விஷயங்களை அவளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவை உங்கள் மகளுக்கு எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில், உங்களுக்கும் பத்து வயதில் மகள் இருந்தால் நீங்கள் உங்கள் மகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய  முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

இதையும் படிங்க:  குழந்தைங்க தினமும் 'பூண்டு பால்' குடித்தால் மழைகாலத்துல சளி தொந்தரவே இருக்காதாம் தெரியுமா?

Parenting Tips For 10 Year Old Girls

10 வயது மகள்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

1. குழந்தைகளுக்கு பெரும்பாலும் எது சரி, எது தவறு என்று தெரிவதில்லை. இதனால் அவர்கள் செய்யும் காரியங்களை அவர்களால் சரியாக தீர்மானிக்க முடியாமல் போகிறது. அது அவர்களது படிப்பு, தொழில், வாழ்க்கை போன்றவை கூட இருக்கலாம். எனவே உங்கள் மகளுக்கு 10 வயது நிறைவடைந்த உடன் சரியான மற்றும் தவறான வித்தியாசத்தை கற்றுக்கொடுங்கள் இதனால் அவள் தனது வாழ்க்கையில் சரியான முடிவை எடுத்து வெற்றி பெற முடியும்.

2. உங்கள் மகளுக்கு 10 வயது ஆன பிறகு உங்களது போன் நம்பர் மற்றும் வீட்டு முகவரியை கண்டிப்பாக நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், அவை உதவும். மேலும் உங்களது மகள்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுங்கள் மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள்.

Parenting Tips For 10 Year Old Girls

3. உங்களது மகள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது என்பதை நீங்கள் அவளுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.

4. உங்களது மகளுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். மேலும் கல்வியின் முக்கியத்துவத்தை அவளிடம் சொல்லுங்கள். இதன் மூலம் அவள் தனது இலக்கை எளிதில் அடைய முடியும்.

5. பாதுகாப்பு விதிகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை பற்றி உங்கள் மகள்களிடம் கண்டிப்பாக சொல்லுங்கள். இது தவிர ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும் அவளுக்கு விளக்கமாக சொல்லுங்கள். அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் மகளுக்கு விளக்கவும்.

6. ஒவ்வொரு பெண் குழந்தைக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம். எனவே உங்களது மகளுக்கு ஒழுக்கம் பற்றி சொல்லுங்கள். மேலும் உண்மை, நேர்மை, மரியாதை, பச்சபாதம், ஒத்துழைப்பு போன்ற விஷயங்களையும் அவளுக்கு கற்பிக்க மறக்காதீர்கள்.

இதையும் படிங்க:  குழந்தைக்கு பால் எதுக்குங்க; எலும்புகளை உறுதியாக்கும் இந்த '5' உணவுகளை கொடுங்க!!

Latest Videos

click me!