அழகான, அடர்த்தியான கூந்தலை விரும்பும் நாம், பல தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், நமக்கே தெரியாமல் செய்யும் சில அன்றாட தவறுகள் தலைமுடியை வேரோடு பலவீனமாக்குகின்றன. கூந்தல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அப்படிப்பட்ட 6 பழக்கவழக்கங்களை இங்கு பார்ப்போம்
தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் அல்லது அடிக்கடி ஷாம்பூ போட்டு குளிப்பது நல்லதல்ல. இது உங்கள் உச்சந்தலையில் (scalp) உள்ள இயற்கையான எண்ணெய் பசையை முற்றிலும் அகற்றிவிடும். இதனால் தலைமுடி வறண்டு போவதோடு, அதை ஈடுகட்ட உச்சந்தலை அதிகப்படியான எண்ணெயைச் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் முடி மீண்டும் மீண்டும் பிசுபிசுப்பாக மாறும் ஒரு சுழற்சி உருவாகிவிடும்.
26
ஹீட் டூல்ஸ் அதிகம் பயன்படுத்துவது ;
ஹேர் டிரையர் (Hair dryer) அல்லது ஸ்ட்ரெய்ட்னர் (Straightener) போன்ற வெப்பமூட்டும் கருவிகளைத் தினமும் பயன்படுத்துவது முடியின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். முறையான ‘ஹீட் ப்ரோடெக்டிவ் ஸ்ப்ரே’ (Heat protection spray) பயன்படுத்தாமல் இவற்றைச் செய்யும்போது, முடி முதலில் தன் பளபளப்பை இழக்கும், பின்னர் காலப்போக்கில் உடைந்து கொட்டத் தொடங்கும்.
36
இறுக்கமாக முடிச்சு போடுவது :
கூந்தலை அழகாகக் காட்டுகிறேன் என்று 'போனிடைல்' (Ponytail) அல்லது கொண்டைகளை மிக இறுக்கமாகக் கட்டுவது பலரது வழக்கம். இப்படித் தொடர்ந்து செய்வதால், முடியின் வேர்க்கால்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, முடி பலவீனமடையும். குறிப்பாக, நெற்றிக்கு மேலே உள்ள முன் நெற்றிப் பகுதியில் முடி வேகமாக உதிர ஆரம்பிக்கும்.
குளித்து முடித்தவுடன் தலைமுடி மிகவும் மென்மையாகவும், பலவீனமாகவும் இருக்கும். அந்த நேரத்தில் ஈரமான முடியைத் துண்டால் வேகமாகத் தேய்த்துத் துடைப்பது அல்லது இறுக்கிக் கட்டுவது பெரிய தவறு. இது முடியின் இழைகளை உடைத்து, சிக்கு மற்றும் வறட்சியை (Frizz) அதிகரிக்கும்.
56
ட்ரிம் செய்யாமல் தவிர்ப்பது ;
முடி நீளமாக வளர வேண்டும் என்பதற்காகப் பலர் பல மாதங்களாக முடியை வெட்டாமல் (Trim செய்யாமல்) அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால், முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்புகள் (Split ends) மேல்நோக்கிப் பரவி, ஒட்டுமொத்த முடியின் வளர்ச்சியையும் பாதிக்கும். எனவே, சீரான இடைவெளியில் முடியின் நுனிகளை ட்ரிம் செய்வது அவசியம்.
66
கண்ணில் பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவது ;
விளம்பரங்களைப் பார்த்தோ அல்லது நண்பர்கள் சொல்கிறார்கள் என்றோ, நம் கூந்தலின் தன்மைக்கு ஒத்துப்போகாத ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது ஆபத்தானது. தவறான கெமிக்கல் தயாரிப்புகள் உச்சந்தலையின் துவாரங்களை அடைத்து, பொடுகு மற்றும் முடி உதிர்வை ரகசியமாகத் தூண்டிவிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.