Hair Fall: சீப்பால கூட முடி கொட்டுமா? தலை சீவும் போது நாம் செய்யும் 5 பெரும் தவறுகள்!

Published : Jun 22, 2026, 03:56 PM IST

Hair Fall: இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் முடி கொட்டும் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். நாம் பயன்படுத்தும் சீப்பால் முடி கொட்டலாம் என சிலர் நினைக்கிறார்கள். இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
17
முடி கொட்டுவதற்கு சீப்பு காரணமா?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முடி கொட்டும் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் வயது ஏற ஏற முடி கொட்டுவது பெரும் கவலையாகவே மாறி விட்டது. சரியான ஊட்டச்சத்து இல்லாதது, சுற்றுச்சூழல் மாசுபாடு, ஹார்ன்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் போன்ற பல விஷயங்கள் முடி கொட்டுவதற்கு காரணமாகி விடுகின்றன. இதேபோல் நாம் தினமும் பயன்படுத்தும் சீப்பும் முடிகள் பலவீனமாவதற்கு ஒரு காரணமாக உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? சீப்பால் முடி கொட்டுமா? நாம் செய்யும் தவறுகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

27
ஈரமான முடியை வேகமாக சீவினால்

முடி ஈரமாக இருக்கும்போது, அதன் வேர்க்கால்கள் ரொம்பவே மென்மையாக இருக்கும். இந்த நேரத்தில் சிக்கு எடுக்க நீங்க வேகமாக சீப்பைப் பயன்படுத்தினால், முடிகள் சுலபமாக உடைந்துவிடும். அதனால், முடி முழுமையாக காய்ந்த பிறகு, அகலமான பற்கள் கொண்ட சீப்பால் மெதுவாகச் சீவுவது நல்லது. குறிப்பாக, நீளமான முடி உள்ளவர்கள், முடியின் நுனியில் இருந்து தொடங்கி, படிப்படியாக மேல் பகுதிக்குச் சீவ வேண்டும்.

37
முடிக்கு பொருந்தாத சீப்பும் காரணம்

ஒவ்வொருத்தருடைய முடியும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலருக்கு அடர்த்தியாக, சிலருக்கு மெலிதாக, சிலருக்கு சுருள் முடியாக இருக்கும். ஆனால், பலர் ஏதோ ஒரு சீப்பை வருடக்கணக்கில் பயன்படுத்துவார்கள். சுருள் முடி உள்ளவர்கள் மெல்லிய பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தினால், முடி அதிகமாக உதிரும். அதேபோல, சிக்கு அதிகமாக உள்ள முடிக்கு அகலமான பற்கள் கொண்ட சீப்புதான் சரி. சரியான சீப்பைத் தேர்ந்தெடுப்பது முடி உதிர்வைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

47
சீப்பை சுத்தம் செய்யாமல் இருப்பது

நிறைய பேர் தினமும் சீப்பைப் பயன்படுத்துவாங்க, ஆனால் அதைச் சுத்தம் செய்ய மறந்துடுவாங்க. சீப்பில் சேரும் தூசி, எண்ணெய், இறந்த செல்கள் மற்றும் முடியின் மிச்சங்கள் மீண்டும் தலையின் சருமத்தில் படிய வாய்ப்புள்ளது. இதனால் ஸ்கால்ப் பாதிக்கப்பட்டு பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் வரலாம். நிபுணர்களின் கருத்துப்படி, வாரத்திற்கு ஒரு முறையாவது சீப்பை வெதுவெதுப்பான நீரில், ஷாம்பு போட்டு சுத்தம் செய்வது நல்லது.

57
சிக்கு முடியை வேகமாக சீவுவது

காலையில் எழுந்ததும் அல்லது வெளியில் இருந்து வந்த பிறகும் முடியில் சிக்கு ஏற்படுவது இயல்பு. ஆனால், அந்தச் சிக்கை பொறுமை இல்லாமல் ஒரேயடியாக இழுத்துச் சீவும்போது, முடிகளின் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இது முடி உடைவதற்கு முக்கிய காரணமாகிறது. சிக்கு இருக்கும்போது, முதலில் கைகளால் அல்லது டிடாங்லிங் ஸ்ப்ரே (detangling spray) உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து, அதன் பிறகு மெதுவாகச் சீவ வேண்டும்.

67
மற்றவர்களின் சீப்பைப் பயன்படுத்துவது

குடும்பத்தில் எல்லோரும் ஒரே சீப்பைப் பயன்படுத்துவது பல வீடுகளில் சாதாரணமாக நடக்கும். ஆனால், நிபுணர்களின் கருத்துப்படி இது ஒரு நல்ல பழக்கம் இல்லை. சீப்புகள் மூலம் பொடுகு, பூஞ்சைத் தொற்றுகள் (fungal infections), பேன் போன்ற பிரச்சினைகள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவ வாய்ப்புள்ளது. அதனால், ஒவ்வொருவரும் தனித்தனி சீப்பு பயன்படுத்துவதுதான் நல்லது.

77
நிபுணர்கள் சொல்து என்ன?

நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரணம்தான். சீவும்போது சில முடிகள் உதிர்வதைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. ஆனால், அசாதாரணமாக முடி கொட்டினால், மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், முடி ஆரோக்கியமாக இருக்க சரியான ஷாம்பு, சரிவிகித உணவு, போதுமான தண்ணீர், நல்ல தூக்கத்துடன், சீப்பைச் சரியாகப் பயன்படுத்துவதும் முக்கியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories