காலை உணவு நம் நாளுக்கு மிகவும் முக்கியமான தொடக்கமாகும். ஆனால் நாம் சாப்பிடும் சில காலை உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உடலில் கொழுப்பு அதிகரித்தால் அது இதயத்தின் நரம்புகளில் படிந்து அவற்றை சுருக்கி மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பன் மடங்கு அதிகரிக்கும். எனவே, காலை உணவு பட்டியலில் இருந்து விளக்க வேண்டிய 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.
26
சர்க்கரை தானியங்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் காலையில் பாலில் சர்க்கரை தானியங்கள் கலந்து குடிக்கிறோம். விளம்பரத்தில் அதை ஆரோக்கியமானது என்று காட்டினாலும் அவற்றின் நிறைய சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், குறைந்த நார்ச்சத்து உள்ளதால் அவை கல்லீரலில் கேட்டுக் கொழுப்பை அதிகரிக்கின்றன. எனவே அவற்றுக்கு பதிலாக காலையில் ஓட்ஸ் கஞ்சி அல்லது சர்க்கரை சேர்க்காத தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.
36
வறுத்த உணவுகள்
பலர் காலை உணவாக பூரி, பரோட்டா, சமோசா சாப்பிட விரும்புவார்கள். அவை சுவையாக இருக்கும். ஆனால் அவற்றில் நிறைய எண்ணெய் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளதால் அவை உடலில் கொழுப்பின் அளவை வேகமாக அதிகரித்து உங்களது ரத்த நாளங்களில் சுருக்கிவிடும்.
காலையில் குக்கீஸ், டோனட்ஸ் போன்றவை சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கலாம். ஆனால் அவற்றில் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளதால் அவை உடலில் அதிகரிக்கின்றன. இந்த கொழுப்புகள் தமனிகளை கடினப்படுத்துவது மட்டுமல்லாமல், இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.
56
முழு கொழுப்புள்ள பால்
பால், சீஸ், தயிர் ஆகியவை ஆரோக்கியமானவை என்றாலும் அதில் முழு கொழுப்பு உள்ளதால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும் அவற்றில் அதிக நிறைவேற்றக் கொழுப்பும் உள்ளது. எனவே இவற்றுக்கு பதிலாக நீங்கள் குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர், சீஸ் சாப்பிடலாம்.
66
பிரட்
பலர் காலையில் பிரட்டை டோஸ்ட் செய்து அல்லது சாண்ட்விச் வடிவில் சாப்பிடுவார்கள். ஆனால் பிரெட்டி சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இதில் மிகக் குறைந்த நார்ச்சத்து உள்ளது. இது ஒரு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் என்பதால் இது உடலில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்யும். மறைமுகமாக கெட்ட கொழுப்பு பாதிக்கப்படும். எனவே இவற்றிற்கு பதிலாக நீங்கள் பல தானியங்கள் அல்லது முழு கோதுமை பிரட்டை வாங்கி சாப்பிடுங்கள்.