சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கனுமா? மறந்தும் '5' விஷயங்களை பண்ணாதீங்க!!

First Published | Nov 22, 2024, 2:37 PM IST

Tips For Diabetes : சர்க்கரை நோயாளிகள் தங்களது அன்றாட வழக்கதில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

Tips For Diabetes In Tamil

சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான நோய்களில் ஒன்றாகும். மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கத்தால் மற்றும் உடலில் உள்ள குறைபாடுகளின் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றால் சர்க்கரை நோய் வரும். 

Tips For Diabetes In Tamil

இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் தங்களது அன்றாட வழக்கதில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். எனவே, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வைக்க சர்க்கரை நோயாளிகள் செய்யக் கூடாத 5 விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: அமர்ந்தபடி செய்ற இந்த பயிற்சி 'சுகர்' ஏறாமல் தடுக்கும்!! இனி கஷ்டப்பட்டு வாக்கிங் போகாதீங்க.. சூப்பர் டிப்ஸ்

Latest Videos


Tips For Diabetes In Tamil

சர்க்கரை நோயாளிகள் செய்யக் கூடாத 5 விஷயங்கள்:

மோசமான வாழ்க்கை முறை:

சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை தான். காலையில் தாமதமாக தூங்கி எழுவது. அதுபோல, இரவு நேரத்தில் தாமதமாக தூங்க்ச் செல்வது. இதுதவிர, பகல் முழுவதும் எந்தவிதமான உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பது போன்றவையாகும். இப்படி இருப்பது உடலில் வாதம், கபத்தை அதிகப்படுத்தும். இவற்றை தவிர்ப்பது மிகவும் அவசியம். 

எனவே இவற்றை தவிர்க்க, தினமும் 40 நிமிடங்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் மற்றும் உடலின் ஆக்ஸிஜன் அளவை சரியாக வைத்து இன்சுலின் சுரக்க இது பெரிதும் உதவுகிறது.

Tips For Diabetes In Tamil

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்:

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும் போக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்து. அதுபோல, வெள்ளை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் பசையம் கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.  அதற்கு பதிலாக, புதிய பழங்கள், காய்கறிகள் சாப்பிடுங்கள். இதுதவிர, சோளம், ராகி போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.

Tips For Diabetes In Tamil

இரவில் தாமதமாக சாப்பிடாதே!

இரவில் தாமதமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் மற்றும் பல நோய்கள் வருவதற்கும் காரணமாகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இரவு 8 மணிக்கு கண்டிப்பாக இரவு உணவு சாப்பிட முடித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  நடுராத்திரியில் திடீர் பசியா? 'சர்க்கரை நோயாளிகள்' எதை சாப்பிட்டால் 'சுகர்' அதிகரிக்காது தெரியுமா? 

Tips For Diabetes In Tamil

சாப்பிட்ட உடனே தூங்காதே!

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்ட உடனே ஒருபோது தூங்கவே கூடாது. மீறினால், இரத்தில் சர்க்கரை அளவு அதிகரிகும். எனவே, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் நடத்திவிட்டு, பிறகு தான் தூங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செரிமானம் நன்றாக இருக்கும்.

Tips For Diabetes In Tamil

மருந்துகளை மட்டும் நம்பாதே!

ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாமல் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை மட்டுமே நம்பி இருப்பது  ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க முடியாது. இது தவிர மருந்துகள் விளைவால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

click me!