குழந்தை பருவத்தில் இருந்து குழந்தைகளை நன்கு பராமரித்தால் அவர்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியம் தொடர்பான எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள். அதாவது குழந்தை பருவத்தில் கொடுக்கும் உணவு அவர்கள் வளரும் போது பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே குழந்தைகளை கவனித்துக் கொள்வது ரொம்பவே முக்கியம்.
25
Best Hair Oil For Kids In Tamil
இந்த வகையில் குழந்தைகளின் தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதற்கு சரியான எண்ணெயை தேர்ந்தெடுப்பது ரொம்பவே முக்கியம். எனவே குழந்தையின் முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் எந்த எண்ணெய் சிறந்தது, அதை வாரத்திற்கு எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின் தலைமுடிக்கு பாதாம் எண்ணெய் ரொம்பவே நல்லது. பாதாம் எண்ணெயில் ஒமேகா-3 ஏராளமாகவே உள்ளது. இது தலைமுடியின் வேர்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. இது தவிர பாதாம் எண்ணையில் வைட்டமின் ஈ உள்ளது. இது தலைமுடியை பொலிவாக வைக்க உதவுகிறது. இந்த எண்ணெய் குழந்தைகளின் முடியில் எளிதாக உறிஞ்சப்படுகிறது.
குழந்தைகளின் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு 2 முறையாவது பாதாம் எண்ணையை அவர்களது தலைமுடியில் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் முடிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேர்கள் வலுவாக இருப்பது மிகவும் அவசியம். எனவே குழந்தைகளின் தலைமுடிக்கு எண்ணெய் தடவும் போது அந்த எண்ணெயை கொண்டு உச்சந்தலையில் நன்கு தடவ வேண்டும். குழந்தைகளின் தலையை உங்களது விரல்களை பயன்படுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளின் தலையில் எண்ணெய் உறிஞ்சப்பட்டு வேர்களை அடைகிறது. இதனால் அவர்களது தலைமுடி உள்ளே இருந்து பலப்படுத்தப்படுகிறது.
55
Best Hair Oil For Kids In Tamil
பாதாம் எண்ணெய் நன்மைகள்:
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை தலைமுடியின் வேர்களை வலுப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் முடி உடையது மற்றும் உதிர்வது குறையும்.
இது தவிர பாதாம் எண்ணெய் முடி வறட்சியை குறைக்கவும், பொடுகு பிரச்சனையை நீக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த எண்ணெய் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. பாதாம் எண்ணெய் குழந்தைகளின் முடி வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது என்று சொல்வதற்கான முக்கிய காரணம் இதுதான்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.