சிங்க் அடிக்கடி கழுவ கஷ்டமா இருக்கா? இப்படி பண்ணா ரொம்ப ஈஸியா கிளீன் பண்ணிடலாம்!!

First Published | Nov 22, 2024, 11:18 AM IST

Sink Pipe Hacks : கிச்சன் சிங்கில் இருக்கும் பைப்பை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Sink Pipe Hacks In Tamil

சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது ரொம்பவே முக்கியம்.  அதுவும் குறிப்பாக சிங்கை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் சிங்க் கீழே இருக்கும் பைப்பைசுத்தம் செய்ய மறந்து விடுகிறார்கள். இதனால் இந்த குழாய்களில் அழுக்குகள் படிந்து விடும். மேலும் அதை தினமும் சுத்தம் செய்வது என்பது முடியாத காரியம். ஆனால் தினமும் சுத்தம் செய்யாமல் அந்த குழாயை பளபளப்பாக வைத்திருக்க முடியும் தெரியுமா?

Sink Pipe Hacks In Tamil

சிங்க் கீழ இருக்கும் குழாய் ரொம்பவே மெல்லிய மற்றும் நெகிழ்வானது என்பதால் அதை அடிக்கடி தேய்த்து கழுவினால் அதன் ஆயுள் குறைந்து விடும் மற்றும் தினமும் சுத்தம் செய்தால் உடையும் அபாயமும் ஏற்படும். எனவே அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்க நீங்கள் அதில் அலுமினியத்தாள் பயன்படுத்தலாம்.

Latest Videos


Sink Pipe Hacks In Tamil

அலுமினியதாள்:

சிங்க் கீழ் உள்ள குழாயை சுத்தம் செய்ய அலுமினியதாளை பயன்படுத்தினால் பைப் நீண்ட காலம் நீடிக்கும். இதற்கு உங்களது பைப்பின் அளவிற்கு ஏற்ப அலுமினியத்தாளை வெட்டி அதைக் கொண்டு பைப்பை நன்றாக சுற்றி வைக்கவும். இதனால் உங்களது சிங்க் குழாய் அலுமினிய தாளில் பாதுகாப்பாக இருக்கும்.

Sink Pipe Hacks In Tamil

நன்மைகள்:

துர்நாற்ற பிரச்சனை நீங்கும் : பாத்திரங்களை சிங்கிள் கழுவும் போது அதில் கிரீஸ் படிந்து கொண்டே இருக்கும். இதனால் சிங்கில் தண்ணீர் தேங்கியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அலுமினிய தாளை ஜிங்க் பைப்பில் இறுக்கமாக போர்த்தி மூடிவிட்டால் வெப்ப அதிகரிப்பால் கிரீஸ் எளிதில் வெளியேறாது. இதனால் சிங்கில் துர்நாற்ற பிரச்சனையும் பெருமளவில் நீங்கும்.

இதையும் படிங்க:  கிச்சன் சிம்னியை கை வலிக்காமல் 'இத' விட ஈசியா சுத்தம் செய்ய முடியாது.. எப்படி தெரியுமா?

Sink Pipe Hacks In Tamil

எலிகள் பிரச்சனை இருக்காது

சமையலறையில் எலிகள் தொல்லை அதிகமாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக சிங்க் கீழே இருக்கும் பைப்பை அது கடித்து சேதப்படுத்திவிடும். இத்தகைய சூழ்நிலையில் சிங்க் குழாயில் அலுமினியத்தாளை கட்டி வைத்தால் எலிகள் அதற்கு பயந்து ஓடிவிடும்.

இதையும் படிங்க: கிச்சன் சிங்கில் இந்த '1' பொருள் வைங்க.. அடைப்பு தடுக்க சூப்பர் டிப்ஸ்!!

Sink Pipe Hacks In Tamil

தண்ணீர் லீக் ஆகாது

சில சமயங்களில் கிச்சன் சிங்கிள் ஆயில் தண்ணீர் லீக் ஆகிவிடும். இதற்கு அலுமினிய தாளை சிங்க் குழாயில் சுற்றி வைத்தால் அது ஈரப்பதத்தை தடுக்கும். இதனால் பாத்திரம் கழுவும் போது தண்ணீரும் லீக் ஆகாது.

click me!