
ஆயுர்வேதம் நம் உணவுமுறைகள் குறித்து பல விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது. அசைவ உணவுகளுடன் சில உணவுகளை மறந்தும் சாப்பிடக் கூடாது. அவை உடலுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பால் உணவுகள்:
பால் சார்ந்த உணவு பொருள்களுடன் அசைவ உணவை சாப்பிடக்கூடாது. சாக்லேட் கலந்து பால் குடிப்பதோ, பால் குடித்த பின் சாக்லேட் உண்பதோ கூடாது. உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவையும் பால் உணவுகளுடன் சாப்பிடக் கூடாது. காலை உணவை சாப்பிட முடியாத சிலர் பால் மற்றும் வாழைப் பழங்களை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இவ்வாறு சாப்பிடுவது சரியான தேர்வு அல்ல. இவ்வாறு சாப்பிடுவதால் செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.
பீன்ஸ்:
பீன்ஸ் சத்துள்ள நல்ல காய்கறி தான். ஆனால் பீன்ஸ் சாப்பிடும்போது அசைவ உணவுகளான சிக்கன், பீப், மட்டன், முட்டை, மீன் போன்றவை உண்ணக் கூடாது.
இதையும் படிங்க: தயிர் நல்லதுனு தெரியும்.. ஆனா இந்த '1' உணவுடன் சாப்பிட்டால் '4' பிரச்சனைகள் வரலாம்!!
தயிருடன் சாப்பிடக் கூடாதவை:
கீரை சாப்பிடும்போது தயிர் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கீரைகள் செரிப்பதற்கு அதிக நேரம் தேவை. தயிருடன் கீரை சாப்பிட்டால் மந்தமாக உணரக் கூடும். கருவாடு சாப்பிடும்போது தயிர் உண்ணக் கூடாது. சூட்டை கிளப்பும் உணவை உண்ணும்போது குளிர்ச்சியான உணவுகளை நிச்சயம் தவிர்க்கவேண்டும். தயிர் சாப்பிட்டால் அந்த தினம் மாம்பழத்தை தவிர்க்கவேண்டும்.
நல்லெண்ணெய்:
மீன் குழம்பு போன்ற அசைவ உணவுகளை நல்லெண்ணெயில் சமைப்பது கூடுதல் சுவையும், மனத்தையும் தரும். ஆனால் மீனை நல்லெண்ணெயில் சமைக்கக்கூடாது. எந்த இறைச்சியையும் நல்லெண்ணெயில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். முள்ளங்கி உண்ணும் நாளில் மீன் சாப்பிட வேண்டாம். இறைச்சி சமைக்கும்போது வினிகரை சேர்க்கக் கூடாது.
இதையும் படிங்க: மீன் சாப்பிடும் போது 'இந்த' உணவுகளை மட்டும் தவிர்க்கனும்!! மீறினால் சேதாரம் தான்!!
மட்டன் + பால் - டேஞ்சர்:
மட்டனும், பாலும் புரதச்சத்து நிறைந்தவை. செரிமானம் அடைய தாமதமாகும். இதன் காரணமாகவே இரண்டும் ஒன்றாக சாப்பிடக் கூடாத காம்போ உணவுகள் என சொல்லப்படுகிறது. மட்டன் சாப்பிட்ட பின் பால் குடிக்கவே கூடாது. மட்டன், பால் இரண்டையும் ஒரே நாளில் சாப்பிடுவது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். மட்டன் சாப்பிட்ட பின் பால் குடித்தால் வயிற்றில் வீக்கம், மந்தம், வாயு, அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஒவ்வொரு உணவும் செரிக்கவும், அதன் சத்துகளை கிரகித்து கொள்ளவும் குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. அதனால் தான் பால் குடிக்கும்போது மட்டன், சிக்கன், மீன் போன்றவை எடுத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
பக்க விளைவுகள்:
பாலுடன் அசைவ உணவுகளை உண்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. மட்டன், சிக்கன், மீன் ஆகிய உணவுகளுடன் பால் குடித்தால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிப்பு ஏற்படும். மட்டனுடன் சாப்பிட்டு பால் குடித்தால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனை தலைதூக்கி உணவு விஷமாக (food poison) காரணமாகிவிடும்.
பாலும் மட்டனும் ஒன்றாக சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகமாகும். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகம் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே இனிமேல் மட்டன் சாப்பாடு உண்ணும் போது பால் குடிக்காதீர்கள். பாலும் மட்டனும் தனித்தனியாக வெவ்வேறு நாளில் உண்ணும்போது நமக்கு சத்துக்களை வாரி வழங்கக் கூடிய அற்புதமான உணவுகளாகும்.