
வானிலை மாற்றங்கள், குளிர்காற்று, ஒருபுறம் மழை காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக முதியவர்கள், சிறு குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது.
குழந்தைகளுக்கு இரவில் தான் அதிகமாக காய்ச்சல் வருகிறது. காலையில் காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்லலாம். ஆனால் இரவில் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. இதனால் பெற்றோருக்கு என்ன செய்வதென்று தெரியாது. எனவே குழந்தைகளுக்கு இரவில் காய்ச்சல் வந்தால் அவர்களை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்று இப்போது தெரிந்து கொள்வோம்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கு ஒழுகுதா? 'இப்படி' 1 முறை செய்தால் உடனடி நிவாரணம்!!
இரவில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
இரவு 10 மணிக்கு மேல் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாது. ஆனால் பல குழந்தைகளுக்கு இரவில் தான் காய்ச்சல் அதிகமாக வருகிறது. காய்ச்சல் வந்த குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. ஆனால் பல பெற்றோர்கள் இரவில் காய்ச்சல் வரும்போது பயப்படுகிறார்கள்.
ஏனெனில் பெரியவர்களைப் போல குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் வியர்க்காது. மேலும் உடல் அதிக வெப்பமடையும். எனவே பெற்றோர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் பயப்படுவதற்கு பதிலாக ஈரத்துணியால் அவர்களின் உடலைத் துடைக்க வேண்டும். இது உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
மருந்துகள் கொடுக்க வேண்டும்
காய்ச்சல் வந்தால் ஈரத்துணியால் உடலைத் துடைத்த பிறகு வீட்டில் உள்ள காய்ச்சல் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்த காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக மருந்துகள் கொடுக்க வேண்டும். குழந்தைகள் மருந்துகளை எடுத்துக் கொண்ட உடன் தூங்கி விடுவார்கள்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் அடிக்கடி காய்ச்சல்? குழந்தைங்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 'இதை' கொடுங்க!
நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும்
குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் அவர்களின் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வியர்க்கவில்லை என்றாலும் தண்ணீர் அதிகமாக குடிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் உடல் வெப்பம் அதிகரிக்கும். அவர்களின் உடல் நீர்ச்சத்துடன் இருந்தால் காய்ச்சல் அதிகரிக்காது. உடல் வெப்பமும் குறையும்.
உடைகள் குறித்து கவனம்
காய்ச்சல் வந்துவிட்டது என்று அவர்களுக்கு கனமான உடைகளை அணிவிக்கக்கூடாது. ஏனெனில் இதனால் அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும். எனவே காய்ச்சல் வந்தால் குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிக்க வேண்டும். மேலும் குளிரில் இருந்து பாதுகாக்க ஸ்வெட்டர், ஜெர்கின் போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.
அடிக்கடி மருந்துகள்
மேற்கண்ட முறைகளைப் பின்பற்றியும்.. இரவு முழுவதும் அவர்களுக்கு காய்ச்சல் குறையவில்லை என்றால், உடல் வெப்பநிலை சிறிதும் குறையவில்லை என்றால் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒரு முறை காய்ச்சல் மருந்துகளை கொடுக்க வேண்டும். அப்போதுதான் காய்ச்சல் குறையும். மருந்துகளின் விளைவால் தூங்கிக் கொண்டிருந்தாலும் குழந்தைகளை அலட்சியப்படுத்தக்கூடாது. இரவு முழுவதும் அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். காலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.