Foods To Avoid Cooking In A Pressure Cooker In Tamil
தற்போது பிசியான வாழ்க்கை என்பதால் நேரமில்லாத காரணத்தால் குக்கரில் சமைத்து சாப்பிடுகிறோம். குக்கரில் சமைத்து சாப்பிடுவது செய்யும் வேலையை எளிதாக்கும் என்றாலும் சில உணவுகளை குக்கரில் சமைத்து சாப்பிடுவது நல்லதல்ல என்கின்ற நிபுணர்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த உணவுகளை குக்கரில் சமைத்து சாப்பிடக்கூடாது அது ஏன் என்று இங்கு பார்க்கலாம்.
Foods To Avoid Cooking In A Pressure Cooker In Tamil
பால் பொருட்கள்
குக்கரில் பால் பொருட்களை ஒருபோதும் சமைத்து சாப்பிடக்கூடாது. இதனால் சமைக்கும் உணவின் சுவை மாறிவிடும். சில சமயங்களில் அது கெட்டுவிடும். பால் பொருட்களை குக்கரில் சமைத்து சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
Foods To Avoid Cooking In A Pressure Cooker In Tamil
மென்மையான காய்கறிகள்
வெள்ளரிக்காய் குடைமிளகாய் போன்ற மென்மையான காய்கறிகளை குக்கரில் சமைக்க வேண்டாம். ஏனெனில் இவை மென்மையானது என்பதால் குக்கரில் சமைக்கும் போது சீக்கிரமாகவே வெந்துவிடும் மற்றும் அவற்றின் சுவையும் மாறிவிடும்.
Foods To Avoid Cooking In A Pressure Cooker In Tamil
தானியங்கள்
பார்லி, குயினோவா போன்ற தானியங்களை குக்கரில் சமைத்தால் அவை மிருதுவாகி அவற்றின் தன்மையை இழந்துவிடும். எனவே அவற்றை ஒருபோதும் குக்கரில் சமைக்க வேண்டும். அதற்கு பதிலாக ஒரு பாத்திரத்தில் சமைப்பது நல்லது.