குளிர்காலத்தில் பெண்கள் தினமும் '2' ஸ்பூன் எள் கட்டாயம் சாப்பிடனும்.. ஏன் தெரியுமா?
Sesame Seeds Benefits In Winter : இந்த குளிர்காலத்தில் பெண்கள் தினமும் இரண்டு ஸ்பூன் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
Sesame Seeds Benefits In Winter : இந்த குளிர்காலத்தில் பெண்கள் தினமும் இரண்டு ஸ்பூன் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
எள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இது பற்றி நாம் அனைவருக்கும் ஏற்கனவே தெரியும். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும். ஏனெனில் அதன் தன்மை வெப்பமாக இருக்கும். குளிர்காலத்தில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எள் சாப்பிடலாம். ஆனால் குளிர்காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
எள்ளில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே எள்ளில் லட்டு, மிட்டாய் என பல வகையான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம். எள்ளை எப்படி சாப்பிட்டாலும் அதன் பலன்கள் அப்படியே கிடைக்கும். இத்தகைய சூழ்நிலையில் குளிர்காலத்தில் பெண்கள் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகள் எள் சாப்பிட்டால் என்ன நடக்கும்? உங்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கிறதா? வாங்க தெரிஞ்சிகலாம்!
குளிர்காலத்தில் பெண்கள் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
எலும்புகள் வலுவடையும்
குளிர்காலத்தில் பெண்கள் எள் சாப்பிட்டு வந்தால் அது அவர்களின் எலும்புகளை வலுவாகும். ஏனெனில் எள்ளில் கால்சியம், அமினோ அமிலங்கள் உள்ளன. அவை எலும்புகளை வலிமைப்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் எள்ளை தொடர்ந்து சாப்பிட்டுவதன் மூலம் உடல் சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை நீங்கும்
மோசமான உணவு பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாக பல சமயங்களில் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் எள் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து உடனே நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் எள்ளில் இருக்கும் கொழுப்பு அமிலம் ஒழுங்கற்ற மாதவிடாயை ஒழுங்கு படுத்துகிறது.
முதுகு வலி பிரச்சனை நீங்கும்
குளிர்காலம் வந்து விட்டாலே சில பெண்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடவே வந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் வறுத்த எள் சாப்பிட்டு வந்தால் முதுகு வலியில் இருந்து உடனே நிவாரணம் கிடைக்கும்.
ரத்த சோகை நீங்கும்
நம்முடைய நாட்டில் பெரும்பாலான பெண்கள் தங்களது உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு ரத்த சோகை ஆளாகுகிறார்கள். எனவே இதை தவிர்க்க அவர்களது உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். எள்ளில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவர்களது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி, ரத்த சோகப் பிரச்சனைகள் இருந்து அவர்களை விடுவிக்கிறது.
சருமத்திற்கு நன்மை பயக்கும்
குளிர்காலத்தில் பெண்கள் எள் சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ சருமத்திற்கு ஊட்டமளித்து சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
ஆற்றல் அதிகரிக்கும்
குளிர்காலத்தில் உடலில் ஆற்றல் குறைந்து, சோம்பல் ஏற்படுவது வழக்கம். இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் எல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் ஒமேகா 3 அமிலம் உடலுக்கு தேவையான ஆற்றலை முழுமையாக வழங்குகிறது.
எவ்வளவு சாப்பிட வேண்டும்?
எள் இயற்கையாகவே வெப்பமானவை என்பதால் அவற்றை அதிகமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும் குளிர்காலத்தில் நீங்கள் எள் சாப்பிட விரும்பினால் அவற்றை லேசாக வறுத்து காற்று புகாத ஒரு கண்ணாடி டப்பாவில் அடைத்து வைத்து தினமும் காலை ஒரு ஸ்பூன் மற்றும் மாலை ஒரு ஸ்பூன் என்று சாப்பிடலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக மட்டும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: எள் சாப்பிட்டால் இத்தனை பக்க விளைவுகள் வருமா! யாரெல்லாம் சாப்பிடவே கூடாது தெரியுமா? எவ்வளவு சாப்பிடணும்!!