இந்த 5 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாக மாறிடுமாம்; இனி இந்த தப்ப பண்ணாதீங்க..!

First Published | Oct 23, 2024, 10:38 AM IST

Dangers of Overcooking : நாம் சமைக்கும் சில உணவுகளை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிட்டால் அது நம் உடலில் எதிர் வினை புரிகிறது. அது என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Dangers of Overcooking In Tamil

நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கினாலும் சில சமயங்களில் அது ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா? ஆம் நாம் உண்ணும் உணவு வகைகள் உடன் அதை எப்படி சமைக்கிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? என்பது மிகவும் அவசியம். தவறான உணவு பழக்கம் உடனல்ல கேடுகளுக்கு வழிவகுக்கும் அவற்றில் ஒன்றுதான் உணவுகளை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது. இதனால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். 

Dangers of Overcooking In Tamil

பொதுவாக புதிதாக சமைத்த ஆரோக்கியமான உணவுகள் எப்போதும் உடலுக்கு நல்லது தான். ஆனால் சில சமயங்களில் நாம் காலை சமைத்த உணவை இரவு வரை வைத்து அதை மீண்டும் சூடு படுத்துகிறோம். இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இது தவிர உணவுகளை சமைக்கும் போது கூட அதிகமாக சமைத்தால் கூட ஆபத்துதான். குறிப்பாக சில உணவுகளை அதிகமாக சமைக்கும் போது அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பானது குறைந்து உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். இதனால் புற்றுநோய் கூட வரலாம். அப்படிப்பட்ட உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஒருமுறை யூஸ் பண்ண சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?

Tap to resize

Dangers of Overcooking In Tamil

மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்:

உருளைக்கிழங்கு

பொதுவாக எல்லாருமே உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் எல்லாருடைய வீடுகளிலும் கண்டிப்பாக உருளைக்கிழங்கு இருக்கும். உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் இதை அதிக நேரம் சமைத்தால் அதில் அக்ரிலாமைடு உருவாகும் இது புற்றுநோய்க்கு வழி வகுக்கும். எனவே உருளைக்கிழங்கை அதிக நேரம் சமைக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

தற்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சி பல இடங்களில் கிடைக்கின்றன. கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், அதை  நீங்கள் மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிட வேண்டாம். மீறினால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

இதையும் படிங்க:  சோறு வடித்த  தண்ணீரில் இத்தனை நன்மைகளா?! 'இப்படி' யூஸ் தெரியாம போச்சே!!

Dangers of Overcooking In Tamil

மீன்

மீன் அசைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். மீனில் புரதம்  மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது நீ சாப்பிட்டால் கண் பார்வை மேம்படும். ஆனால் மீனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் அதன் ஊட்டச்சத்துக்களை பெற முடியாது மற்றும் அவை உடலுக்கு தீங்கும் விளைவிக்கும். எனவே முடிந்த வரை நீங்கள் மீன் சமைக்கும்போது மீண்டும் மீண்டும் சூடுபடுத்த வேண்டாம்.

வெள்ளை ரொட்டி

வெள்ளை ரொட்டியில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் அதை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் அதில் அக்ரிலாமைடு உருவாகும். இது புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கும்.

சமையல் எண்ணெய்

எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடு படுத்தப்படும் போது அதில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உருவாகும். எனவே அதை பயன்படுத்தினால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்.

Latest Videos

click me!