cholesterol
இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படும். மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பு மேலும் பல நோய்களை வரவழைக்கிறது. எனவே, நீங்கள் இந்த விஷயங்களில் இருந்து விலகி இருந்தால் நல்லது. எனவே, உடலில் சேரும் கேட்ட கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.
tomato juice
தக்காளி ஜூஸ் செய்முறை:
தக்காளியை நறுக்கி மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு சர்க்கரையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். பின் வடிகட்டியில் சாறை மட்டும் தனியாக எடுத்து பருக வேண்டும். தக்காளியில் இருக்கும், அதிக அளவு நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நியாசின் மற்றும் வைட்டமின் பி3 உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க அனுமதிக்காது எனவே நீங்கள் கட்டாயம் தக்காளி ஜூஸ் தினமும் எடுத்து கொள்ளலாம்.
மேலும் படிக்க....Pumpkin: ஆண்களின் விந்தணு அதிகரிக்க பூசணி விதை பெஸ்ட்...நன்மைகள் ஏராளம் கொண்ட அதிசய விதை!
சுரைக்காய் ஜூஸ்:
முதலில் சுரைக்காயை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது சுரைக்காய் மற்றும் புதினா துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். அதன் பிறகு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும். நீங்கள் தினமும் சுரைக்காய் சாற்றை உட்கொள்வதால், கழிவு கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது. இதயத்தை பாதுகாக்கும்.
kale juice
பாகற்காய் ஜூஸ்:
முதலில் பாகற்காயில் இருக்கும் விதைகளை நீக்கி கழுவி தோலை சீவி துண்டுகளாக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளை சேர்க்கவும். பாகற்காயில் இருக்கும் வைட்டமின்கள், மெக்னீசியம், புரதம், நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது. எனவே, நீங்கள் தினமும் பாகற்காய் சாறு உட்கொள்வது அவசியம்.
மேலும் படிக்க....Pumpkin: ஆண்களின் விந்தணு அதிகரிக்க பூசணி விதை பெஸ்ட்...நன்மைகள் ஏராளம் கொண்ட அதிசய விதை!