FACE PACK: வெறும் பத்து நிமிடத்தில் முகம் வெள்ளையாக அற்புத பேக்..இன்ஸ்டன்ட் பியூட்டி டிப்ஸ்...தீர்வு நிச்சயம்!

Published : Jul 22, 2022, 06:02 AM IST

FACE PACK: வெறும் பத்து நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாறாக, இந்த ஒரு அற்புத பேக் எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

PREV
16
FACE PACK: வெறும் பத்து நிமிடத்தில் முகம் வெள்ளையாக அற்புத பேக்..இன்ஸ்டன்ட் பியூட்டி டிப்ஸ்...தீர்வு நிச்சயம்!
face packs

முகம் அழகாகவும், வெள்ளையாகவும் இருப்பது யாருக்கு தான் பிடிக்காது..இதற்காக நாம் பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பது உண்டு. ஆனால், நாம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வீட்டின் சமையல் அறையில் இருக்கும், ஒரு சில பொருட்களை கொண்டு 
வெறும் பத்து நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற்ற முடியும்.

26

வெயிலின் தாக்கத்தினால், எண்ணெய் வடிந்து வாடிப்போய் இருக்கும் முகத்தை சீக்கிரமாக பொலிவாக மாற்றுவதற்கு இந்த குறிப்பு உங்களுக்கு உபயோகமாக இருக்கும். முகத்தில் கருப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக உங்களுக்கு பலன் கிடைக்கும். வாருங்கள் எப்படி பேஸ் பேக் தயார் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.  மேலும் படிக்க .....Sani Peyarchi 2022: சனியின் நேரடி அருளால்...அடுத்த ஆறு மாதங்கள் இந்த மூன்று ராசிகளின் காட்டில் பண மழை...!
 

36
face packs

தேவையான பொருட்கள்:

கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன்

புளிக்காத கெட்டி தயிர் – 2 ஸ்பூன்

எலுமிச்ச பழச்சாறு – 1 ஸ்பூன்

தக்காளி பழச்சாறு – தேவையான அளவு

46
face packs

செய்முறை விளக்கம்:

1. ஒரு சிறிய கிண்ணத்தில் கான்பிளவர் மாவை போட்டுக்கொண்டு அதில் தயிறு, எலுமிச்சம்பழச் சாறு, தக்காளி பழச்சாறை ஊற்றி, சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்‌. 

2. பிறகு முகத்தை சுத்தமாக சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் போட்டு கழுவி, துடைத்து வைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு பேக்கை முகம் மற்றும் கழுத்துப்பகுதியிலும் போட்டுக் கொள்ளுங்கள். 

56
FACE PACK

பிறகு பத்து நிமிடம் கழித்து முகத்தை வெறும் தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். இந்த பேக்கை தொடர்ந்து மூன்று நாட்கள் போடும்போது முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். இதே பேக்கை தேவைப்பாட்டால் கை கால்கள் முழுவதும் அப்ளை செய்து கொள்ளலாம். 


 மேலும் படிக்க .....Sani Peyarchi 2022: சனியின் நேரடி அருளால்...அடுத்த ஆறு மாதங்கள் இந்த மூன்று ராசிகளின் காட்டில் பண மழை...!

 

66
FACE PACK

இதில் இருக்கும் எலுமிச்சை பழச்சாறும், தயிர் மற்றும் தக்காளி சாரும், முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் கருந்திட்டுகளை குறைக்கக்கூடிய சக்திகொண்டது.  இந்த மூன்று பொருட்களுக்குமே குளிர்ச்சியை தருவதுடன் கருப்பு சருமத்தை வெள்ளையாக்க கூடிய சக்தி உள்ளது. முகம் பொலிவான பின்பு முகத்தில் இருக்கும் கருப்பு நன்றாக குறைக்க விரும்பினால், வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை போட்டு இன்ஸ்டன்ட் பியூட்டியை பெறுங்கள்.

 மேலும் படிக்க .....Sani Peyarchi 2022: சனியின் நேரடி அருளால்...அடுத்த ஆறு மாதங்கள் இந்த மூன்று ராசிகளின் காட்டில் பண மழை...!
 

click me!

Recommended Stories