ஊட்டியே தோத்துடும்; சென்னைக்கு அருகில் 3 சூப்பரான மலைவாசஸ்தலங்கள்; இந்த லீவுல 'மிஸ்' பண்ணிடாதீங்க!

First Published | Dec 24, 2024, 4:39 PM IST

சென்னைக்கு அருகில் இருக்கும் 3 சூப்பரான மலைவாசஸ்தலங்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Nagalapuram Waterfalls

பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்ன மக்களுக்கு மெரினா பீச், வண்டலூர் பூங்கா, மாமலப்புரம் ஆகியவைதான் சுற்றுலா தலங்களாக உள்ளன. ஆனால் ஊட்டி, கொடைக்கானல் போன்று சென்னைக்கு அருகிலும் சூப்பரான மலைவாசஸ்தலங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நாகலாபுரம் அருவி ( Nagalapuram Waterfalls)

சென்னையில் இருந்து வெறும் 70 கிமீ தொலைவில் ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் நாகலாபுரம் அருவி அமைந்துள்ளது. சுமார் 213 அடி உயரம் உள்ள நாகலாபுரம் மலைத்தொடர் டிரக்கிங் செய்வதற்கு ஏற்ற இடமாகும். வனப்பகுதியில் குளிர்ந்த காற்றை சுவாசித்தபடி நாகலாபுரம் அருவியில் குளியல் போடுவது தனி சுகத்தை தரும். 

Hill stations near Chennai

எப்படி செல்வது? 

சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் தமிழ்நாட்டின் ஊத்துக்கோட்டையில் இருந்து 13 கிமீ தொலைவில்  நாகலாபுரம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து கார் அல்லது பைக்கில் செல்லலாம். அரசு பேருந்துகளில் நாகாலாபுரம் சென்று விட்டு அங்கு இருந்து ஆட்டோ அல்லது கார்களில் மலைப்பகுதியை அடையலாம். சென்னையில் இருந்து ரயிலில் நகரி சென்று விட்டு அங்கு இருந்து 29 கிமீ பேருந்தில் நாகலாபுரம் செல்லலாம்.

4 நாள் கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தை சுற்றி பார்க்கலாம்; அதுவும் கம்மி விலையில்; IRCTC டூர் பேக்கேஜ்!

Tap to resize

Yelagiri Hills

ஏலகிரி (Yelagiri)

சென்னையில் இருந்து 230 கிமீ தொலைவில் ஜோலார்பேட்டையில் இருந்து 19 கிமீ தூரத்தில் ஏலகிரி மலை அமைந்துள்ளது. அமைதியான ஏரிகள், அழகிய பசுமையான பள்ளத்தாக்குகள், அழகான ரோஜா தோட்டங்கள் என ஏலகிரி மலைத்தொடர் உங்கள் மனதை கொள்ளையடிக்கும். பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கு ஏலகிரி பெயர்பெற்றது. 

எப்படி செல்வது?

சென்னையில் இருந்து காரில் ஏலகிரிக்கு 4 மணி நேரத்தில் சென்று விட முடியும். மலைப்பாதையில் கொண்டை ஊசி வழியாக பயணிப்பது இனிமையான நினைவுகளைத் தரும். சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் அனைத்தும் ஜோலார்பேட்டை வழியாக செல்லும்.  ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

Horsley Hills

ஹார்ஸ்லி ஹில்ஸ் (Horsley Hills)

சென்னையில் இருந்து 274 கிமீ தொலைவில் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி என்ற இடத்தின் அருகே ஹார்ஸ்லி ஹில்ஸ் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1290 மீட்டர் உயரத்தில் உள்ள ஹார்ஸ்லி மலை உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியை தரும். இருபுறமும் மரங்களால் சூழப்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் செல்வது உங்களின் கவலைகளை மறக்கச் செய்யும்.

எப்படி செல்வது?

சென்னையில் இருந்து வேலூர், சித்தூர், மதனப்பள்ளி வழியாக ஹார்ஸ்லி ஹில்ஸ் சென்றடையலாம். சென்னையில் இருந்து சித்தூருக்கு ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்துகளில் ஹார்ஸ்லி ஹில்ஸ்க்கு செல்லலாம். மதனப்பள்ளியில் இருந்து ஆந்திர அரசு பேருந்துகள் உள்ளன. 

பஸ் டிக்கெட் புக் பண்ண போறீங்களா? ஆபர்களை வாரி வழங்கும் புக்கிங் Apps லிஸ்ட் இதோ!

Latest Videos

click me!