4 நாள் கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தை சுற்றி பார்க்கலாம்; அதுவும் கம்மி விலையில்; IRCTC டூர் பேக்கேஜ்!

Published : Dec 24, 2024, 01:26 PM ISTUpdated : Dec 24, 2024, 01:28 PM IST

பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரத்துக்கு ஐஆர்டிசியின் டூர் பேக்கேஜ் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
4 நாள் கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தை சுற்றி பார்க்கலாம்; அதுவும் கம்மி விலையில்; IRCTC டூர் பேக்கேஜ்!
Kanyakumari

இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூரு உள்ளது. பெங்களூருவில் இருந்து ஏராளமான ஐடி ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக ஐஆர்சிடிசி (IRCTC ) ஒரு சூப்பரான டூர் பேக்கேஜை செயல்படுத்தி வருகிறது. அவை குறித்து விரிவாக பார்ப்போம்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பெங்களூருவில் இருந்து சுற்றுலா ரயில் கன்னியாகுமரிக்கு புறப்படுகிறது. பின்பு வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் சுற்றுலாவிற்கு பிறகு மீண்டும் பெங்களூரு திரும்பும். இந்த டூர் பேக்கேஜின் படி பெங்களூருவில் இருந்து ஒவ்வொரு வாரமும் மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 17235) புறப்படும்.
 

24
Rameswaram

இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்புக்கு மறுநாள் காலை அதவாது வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு சென்றடையும். அங்கு இருந்து சுற்றுலா பயணிகள் ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்த வாகனம் மூலம் கன்னியாகுமரி அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு ஹோட்டல் அறையில் தங்கும் வசதி செய்யப்படும். அங்கு பகவதி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை நினைவகம், திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவிடம் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். அன்று மாலை சன்செட் பாயிண்ட் மற்றும் மெழுகு அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். 

அன்று இரவு ஹோட்டலில் தங்கி விட்டு கடற்கரையில் சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்தை பார்க்கலாம். பின்பு அங்கிருந்து புறப்படும் ரயில் ராமேஸ்வரம் சென்றடையும். அன்று இரவு ஹோட்டல் அறையில் தங்கும் வசதி செய்யப்படும். பின்பு ஞாயிறு அதிகாலை ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யலாம். பின்னர் ராமர்பாதம் கோயில், ஐந்து முக அனுமன் கோயிலிலும் தரிசனம் செய்யலாம்.

நீங்கள் வாங்கும் மருந்து உண்மையா? போலியா? கண்டுபிடிக்க ஈசியான டிப்ஸ்!

34
Kanyakumari Tourist Places

பின்னர் ஹோட்டல் அறையை செக் அவுட் செய்து விட்டு ரயில் மதுரை புறப்படும். மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருமலை நாயக்கர் மஹால் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று பார்க்கலாம். அன்று இரவு மதுரையில் 11.50 மணிக்கு புறப்படும் ரயில் திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

இந்த டூர் பேக்கேஜில் கம்ஃபோர்ட், ஸ்டாண்டர்ட் என 2 வகைகள் உள்ளன. கம்ஃபோர்ட் பேக்கேஜை தேர்வு செய்தால் 3AC ரயில் பெட்டியில் பயணிக்கலாம். ஸ்டாண்டர்ட் பேக்கேஜை தேர்வு செய்தால் ஏசி இல்லாத சாதாரண முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யலாம். அதே வேளையில் நீங்கள் எந்த பேக்கேஜ் எடுத்தாலும் கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தில் இரவு தங்கும் வசதி செய்து தரப்படும்.

44
Tamilnadu Tourist Places

ஹோட்டலில் தங்கும்போது காலை உணவு மட்டும் இலவசமாக வழங்கப்படும். மதிய, இரவு உணவு சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த செலவில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வாகன வசதி செய்து தரப்படும். பயணக்காப்பீடும் உண்டு. நினைவுச் சின்னங்களுக்கான நுழைவுக் கட்டணம், போட்டோ, வீடியோ கட்டணம் பயணிகளின் பொறுப்பு.

இந்த டூர் பேக்கேஜ் ரூ.10,130ல் இருந்து தொடங்குகிறது. நீங்கள் செல்லும் நபர்களை பொறுத்து, நீங்கள் தேர்வு பேக்கேஜை பொறுத்து கட்டணம் மாறுபடும். சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் https://www.irctctourism.com/என்ற ஐஆர்சிடிசியின் இணையதளம் சென்று புக் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு Bengaluru City Railway Station:- 8595931292 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பஸ் டிக்கெட் புக் பண்ண போறீங்களா? ஆபர்களை வாரி வழங்கும் புக்கிங் Apps லிஸ்ட் இதோ!

Read more Photos on
click me!

Recommended Stories