ஒரே சீசனில் டாப் 10ல் இடம்பிடித்த வெளிநாட்டு வீரர்.. ஓய்வுக்கு பிறகும் கோலோச்சும் சேவாக்.. ஐபிஎல் சுவாரஸ்யம்

First Published Mar 10, 2020, 2:50 PM IST

ஐபிஎல் 13வது வரும் 29ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் என்றாலே அதிரடி தான். டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுவதன் நோக்கமே ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்வதுதான். அந்தவகையில், ஐபிஎல்லில் காட்டடி அடித்து அதிகமான ஸ்டிரைக் ரேட்டை கொண்ட டாப் 10 வீரர்களில் ஆண்ட்ரே ரசல் முதலிடத்தில் இருக்கிறார். 

ஆண்ட்ரே ரசல் கடந்த 2 சீசன்களில் கேகேஆர் அணிக்காக அபாரமாக ஆடி பல வெற்றிகளை குவித்து கொடுத்தார். கடந்த 2 சீசன்களில் ஆடிய அதிரடி பேட்டிங், அவரை ஸ்டிரைக் ரேட்டில் டாப்பில் கொண்டு போய் விட்டுள்ளது. அதேபோல கடந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஆடிய இங்கிலாந்து அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோ டாப் பத்தில் இடம்பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் வெறும் 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். ரிஷப் பண்ட், சேவாக், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவர் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். சேவாக் 2015ம் ஆண்டுடன் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும் டாப் ஸ்டிரைக் ரேட் பட்டியலில் சேவாக்கும் இருக்கிறார். 
 

1. ஆண்ட்ரே ரசல் - 186.41
undefined
2. சுனில் நரைன் - 168.34
undefined
3. மொயின் அலி - 165.92
undefined
4. ரிஷப் பண்ட் - 162.69
undefined
5. க்ளென் மேக்ஸ்வெல் - 161.13
undefined
6. க்றிஸ் மோரிஸ் - 157.62
undefined
7. ஜானி பேர்ஸ்டோ - 157.24
undefined
8. வீரேந்திர சேவாக் - 155.44
undefined
9. ஹர்திக் பாண்டியா - 154.78
undefined
10. டிவில்லியர்ஸ் - 151.23
undefined
click me!