முருகன், நடராஜன், வருண், வாஷிங்டன்.. இந்திய அணிக்கு அடையாளம் காட்ட அன்றே TNPL மூலம் வித்திட்ட ஸ்ரீனிவாசன்.

First Published Nov 10, 2020, 1:20 PM IST

தமிழக கிராம இளையஞர்கள் என்றாவது ஒருநாள் இந்திய அணிக்கு ஆடமுடியுமா என்ற கணவு இன்று உண்மையானது அதற்கு காரணம் TNPL.சென்னை சூப்பர் கிங்ஸில் தமிழக வீரர்கள் இல்லையே, இருக்கும் வீரர்களுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்கிற புலம்பல்களுக்கு இடையே மற்ற அணிகளில் இருக்கும் தமிழக வீரர்கள்தான் இந்த 2020 ஐபிஎல்-ன் கேம் சேஞ்சர்ஸ்!

முதல்முறையாக ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாத 2016 சீசனில் தொடங்கியது தமிழ்நாடு பிரிமியர் லீக். சென்னை மட்டுமல்லாது திருநெல்வேலி, திண்டுக்கல் என தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் கிரிக்கெட் கொண்டு செல்லப்பட்டது
undefined
"தமிழ்நாட்ல, கிரிக்கெட்டை கிராமங்களுக்கு எடுத்துட்டுப் போயிட்டாங்க" என்றார் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன். முதல் ஆண்டே ஸ்டார் ஸ்போர்ட்ஸும் கைகோக்க உலகமே தமிழ்நாடு பிரிமியர் லீகைப் பார்த்தது.
undefined
தினேஷ் கார்த்திக்,முருகன், நடராஜன், வருண் , வாஷிங்டன் சுந்தர் ,ஜெகதீசன், கெளஷிக் காந்தி, பாபா அபராஜித், ஆண்டனி தாஸ்,அஷ்வின் க்ரிஸ்ட், ஆகியோரின் பங்களிப்பால் TNPL பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது
undefined
இவர்கள் மட்டுமல்ல இன்னும் ஐபிஎல் களத்தில் தங்கள் திறமையை நிரூபிக்க ஜெகதீசனும், சாய் கிஷோரும் சரியான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு பெளலிங்கில் அசத்திய பெரியசாமி தற்போது நெட்பெளலராக கொல்கத்தா அணியில் இருக்கிறார். அடுத்த ஆண்டு பெரியசாமிக்குப் பெரிய வாய்ப்பு கிடைக்கலாம்.
undefined
ஐபிஎல்-க்கு கேம் சேஞ்சர்களைத் தந்திருக்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்- செப்டம்பரில் நடக்கும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தள்ளிப்போன தமிழ்நாடு பிரிமியர் லீக், ஐபிஎல் முடிந்ததும் நவம்பரில் தொடங்கயிருக்கிறது. இது தமிழ்நாடு பிரிமியர் லீகின் ஐந்தாவது சீசன்
undefined
click me!