ஐபிஎல் 2020: ஆர்சிபி அணி யாருமே எதிர்பார்த்திராத அந்த அதிர்ச்சிகர முடிவை எடுத்தது ஏன்..? கோலி அதிரடி விளக்கம்

First Published Sep 25, 2020, 6:33 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் யாருமே எதிர்பார்த்திராத அளவிற்கு ஒரு அதிர்ச்சிகர முடிவை எடுத்தது ஏன் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
undefined
முதல் போட்டியில் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
undefined
பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, வழக்கத்திற்கு மாறாக ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே படுமோசமாக சொதப்பினார். ஃபீல்டிங்கில் கேஎல் ராகுலின் 2 எளிய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டார் கோலி. அந்த கேட்ச்களை தவறவிட்டதற்கு பின்னர் 9 பந்தில் 42 ரன்களை குவித்தார் ராகுல். எனவே அந்த கேட்ச் வாய்ப்பு ஆட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல பேட்டிங்கிலும் வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார்.
undefined
வழக்கமாக பேட்டிங், ஃபீல்டிங், ஃபிட்னெஸ் என அனைத்திலும், ஒரு கேப்டனாக தனது அணி வீரர்களுக்கு முன்னோடியாக இருந்து முன்னின்று வழிநடத்தும் கோலி, நேற்று அதை செய்ய தவறினார். அதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்தார். போட்டிக்கு பின்னர் பேசும்போது, தோல்விக்கு இரு கைகளை உயர்த்தி பொறுப்பேற்றுக்கொண்ட கோலி, நேற்று எடுத்த ஒரு முடிவு குறித்தும் விளக்கமளித்தார்.
undefined
உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, 3ம் வரிசையில் ஆடுவதில் ஸ்பெஷலிஸ்ட். குறிப்பாக ஆர்சிபி அணிக்காக தொடக்க வீரராகவோ அல்லது அதிகபட்சம் 3ம் வரிசையிலோ தான் இறங்குவார். இதுவரை அப்படித்தான் இருந்தது நிலை.
undefined
ஆனால் இப்போது ஃபின்ச், தேவ்தத் படிக்கல், ஜோஷ் ஃபிலிப் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருப்பதால், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் யாருமே எதிர்பார்க்காத விதமாக 3ம் வரிசையில் தான் இறங்காமல், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வீரர் ஜோஷ் ஃபிலிப்பை இறக்கிவிட்டார். ஆனால் அவர் டக் அவுட்டாகி வெளியேறியதால், அணியின் மீதான அழுத்தம் கூடுதலாக அதிகரித்தது.
undefined
ஆர்சிபி அணி தோற்ற நிலையில், தனது பேட்டிங் வரிசையில் ஜோஷ் ஃபிலிப்பை இறக்கியது ஏன் என கோலி விளக்கமளித்தார். இதுகுறித்து பேசிய கோலி, ஜோஷ் ஃபிலிப் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியிலும்(ஆஸி., உள்நாட்டு போட்டிகளில்) பிக்பேஷ் லீக்கிலும் டாப் ஆர்டரில் இறங்கி அருமையாக ஆடியிருக்கிறார். இது சீசனின் தொடக்கம் தான் என்பதால், அவரது முழு திறமையை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக முன்வைசையில் இறக்கிவிட்டு, மிடில் ஆர்டரில் வலுசேர்க்கும் விதமாக நாங்கள்(கோலி, ஏபிடி) இறங்கலாம் என்றிருந்தோம் என்றார் கோலி.
undefined
கோலி பைட்
undefined
click me!