ரோஹித் ஷர்மாக்கு என்ன ஆச்சு எல்லாம் எனக்கு தெரியாது போய் BCCI கேளுங்க பொறுப்பில்லாமல் உளறிய ரவி சாஸ்திரி..!

First Published Nov 6, 2020, 11:29 AM IST

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் என நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இந்த தொடர் தொடர்ந்து நடைபெற உள்ளது.
 

டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என மூன்று விதமான போட்டிகளுக்கும் தனித்தனியே அணிகள் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி, கே. ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, பும்ரா போன்ற ஒரு சில வீரர்களை மூன்று விதமான அணியிலும் இடம் பெற்றிருந்தார்கள்
undefined
இந்திய அணியின் துவக்க வீரரும், துணை கேப்டனுமான ரோஹித் சர்மாவின் பெயர் ஒரு அணியிலும் கூட இடம்பெறவில்லை. தொடர்ந்து இந்தியாவிற்காக மிகச்சிறந்த துவக்க வீரராக இருக்கும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம் பெறாததால் பல கேள்விகள் எழுந்தது.
undefined
ஆனால் இதற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் கொடுத்துள்ளார் அவர் கூறுகையில் : ரோகித் சர்மா காயம் அடைந்து இருக்கிறார்.அவர் காயம் அடைந்து இருப்பதால் இந்திய மருத்துவ குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர். எங்களால் தற்போது அதில் தலையிட முடியாது
undefined
அவரது மருத்துவ அறிக்கை தேர்வு குழுவினர் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு அவர் விளையாடாமல் இருப்பதே மிகவும் நல்லது அப்படி விளையாடினால் அந்த காயம் மிகவும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்றும் அவரது காயத்திற்கான விடயத்தில் நான் எதுவும் கூறமுடியாது
undefined
இது குறித்து பி.சி.சி.ஐ யின் மருத்துவக்குழு மற்றும் தேர்வுக்குழு நிர்வாகமும் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரவிசாஸ்திரி
undefined
click me!