ரோஹித் சர்மா அதிரடி அரைசதம்; டெத் ஓவரில் பொளந்துகட்டிய பொல்லார்டு - பாண்டியா..! பஞ்சாப்புக்கு கடின இலக்கு

First Published Oct 1, 2020, 9:48 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில், ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 192 ரன்கள் என்ற கடின இலக்கை பஞ்சாப்புக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மும்பை இந்தியன்ஸும் ஆடுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
undefined
மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் டி காக்கும் களத்திற்கு வந்தனர். ஷெல்டான் கோட்ரெல் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் ஐந்து பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கமுடியாமல் திணறிய டி காக், கடைசி பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
undefined
அதன்பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், 7 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான், எளிதாக பெரிய ஷாட்டுகளை அடிக்கமுடியாமல் திணறினார். 32 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 28 ரன்களை அடித்து அவரும் ஆட்டமிழந்தார்.
undefined
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரோஹித் சர்மா, ஜிம்மி நீஷம் வீசிய 16வது ஓவரை டார்கெட் செய்து, அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரைசத்தை கடந்து 70 ரன்களை குவித்த ரோஹித், ஷமி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
undefined
முதல் 3 போட்டிகளிலும் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த ஹர்திக் பாண்டியா, இந்த போட்டியில் தனது கடமையை செவ்வனே செய்தார். நீஷம் வீசிய 18வது ஓவரில் பாண்டியா ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை விளாச, ஷமி வீசிய 19வது ஓவரில் பொல்லார்டு 3 பவுண்டரிகளையும் பாண்டியா ஒரு பவுண்டரியும் அடித்தார்.
undefined
களத்தில் இருக்கும் 2 வீரர்களுமே பவர் ஹிட்டர்கள் என்றபோதிலும், வேறு வழியில்லாமல் ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதமிடம் கடைசி ஓவரை கொடுத்தார் பஞ்சாப் கேப்டன் ராகுல். கடைசி ஓவரில் பாண்டியா ஒரு சிக்ஸரையும் பொல்லார்டு 3 சிக்ஸர்களையும் விளாச, கடைசி 3 ஓவரில் 62 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவரில் 191 ரன்களை குவித்து 192 ரன்கள் என்ற கடின இலக்கை பஞ்சாப்பிற்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
undefined
ஹர்திக் பாண்டியா ஃபார்முக்கு திரும்பி பெரிய ஷாட்டுகள் ஆடியது மும்பை இந்தியன்ஸுக்கு அனுகூலமான விஷயம். பொல்லார்டு 20 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும், பாண்டியா 11 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களையும் அடித்து அவுட்டாகாமல் இருந்தனர்.
undefined
click me!