ஐபிஎல் 2020: ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்

First Published | Sep 30, 2020, 3:40 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோற்ற கேகேஆர் அணி, சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்கள் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும். துபாயில் நடக்கவுள்ள இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் தான் களமிறங்கும்.
Tap to resize

கேகேஆர் அணியில் ஷுப்மன் கில், நிதிஷ் ராணா ஆகிய இளம் வீரர்கள் செம ஃபார்மில் உள்ளனர். இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல் ஆகிய அதிரடி மன்னர்களும் உள்ளனர். பவுலிங்கில் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், நாகர்கோடி, ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி என அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக உள்ளது.
கேகேஆர் அணி நல்ல பேலன்ஸான அணியாக உள்ளதால், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் இன்றைய போட்டியிலும் களமிறங்கும். அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.
கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஷுப்மன் கில், சுனில் நரைன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, கமலேஷ் நாகர்கோடி.

Latest Videos

click me!