#DCvsSRH அவரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் அல்ல..! சீனியர் வீரரை பற்றி கம்பீர்

First Published Nov 8, 2020, 4:28 PM IST

டெல்லி கேபிடள்ஸ் அணியின் சீனியர் வீரரான ரஹானே, 3ம் வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் இல்லை என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனின் முதல் பாதியில் அருமையாக ஆடி வெற்றிகளை குவித்த டெல்லி அணி, 2ம் பாதியில் தொடர் தோல்விகளை சந்தித்தது. டெல்லி அணியின் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா, அவர் இந்த சீசனில் ஆடிய கடைசி ஆறு போட்டிகளில் சரியாக ஆடவில்லை. சரியாக ஆடாததால் இடையில் சில போட்டிகளில் அவருக்கு பிரேக் கொடுக்கப்பட்டது. பிரேக்குக்கு பின்னரும் அவர் சரியாக ஆடவில்லை.
undefined
பிரித்வி ஷா அவரது கடைசி ஆறு இன்னிங்ஸ்களில் 3 முறை டக் அவுட். எஞ்சிய 3 இன்னிங்ஸ்களில் 7,9,10 ரன்கள் மட்டுமே அடித்தார். அவர் ஆடாத போட்டிகளில் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக இறங்கிய ரஹானேவும் சரியாக ஆடவில்லை. ஆனால் 3ம் வரிசையில் இறங்கி, முக்கியமான கடைசி லீக் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக அறுபது ரன்கள் அடித்து வின்னிங் நாக் ஆடினார்.
undefined
ரஹானே சேர்க்கப்பட்ட பிறகு டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டர் நிலைத்தன்மையை பெற்றது. இந்நிலையில், இன்று நடக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது டெல்லி அணி.
undefined
இந்நிலையில், ரஹானே குறித்து பேசிய கம்பீர், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் தான் டாப்பில் இறங்க வேண்டும்; குறிப்பாக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய போட்டியில்... பிரித்வி ஷா ஃபார்மில் இல்லை. அதேவேளையில் ரஹானேவும் ஃபார்மில் இல்லை. ரஹானே 3ம் வரிசையில், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் அல்ல. ரஹானேவை தொடக்க வீரராக இறக்கலாம். ஆனால் என்னை கேட்டால், பிரித்வி ஷா தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும். பிரித்வி ஷா ஆறு ஓவர் நிலைத்துவிட்டால், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கம்பீர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!