DC vs KKR: நானும் மாத்தமாட்டேன்; நீயும் மாத்தாத..! இந்த மேட்ச்சை மிஸ் பண்ணிடாதீங்க.. சபாஷ் சரியான போட்டி

First Published Oct 3, 2020, 6:11 PM IST

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன.
undefined
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், டெல்லி கேபிடள்ஸும் கேகேஆரும் மோதுகின்றன.
undefined
டெல்லி கேபிடள்ஸில் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ஹெட்மயர், ஷ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரும் கேகேஆரில் சுனில் நரைன், ஷுப்மன் கில், ரசல், மோர்கன், நிதிஷ் ராணா ஆகியோரும் இரு அணிகளிலும் மிகப்பெரிய பவர் ஹிட்டர்கள் இருக்கும் நிலையில், போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடப்பதால் போட்டி கடுமையாக இருக்கும். ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழியும் என்பதில் சந்தேகமில்லை.
undefined
இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் ஆகிய 2 அணிகளுமே, முந்தைய போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.
undefined
கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஷுப்மன் கில், சுனில் நரைன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், அமித் மிஷ்ரா, இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்ட்ஜே.
undefined
click me!