DC vs CSK: ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் சோகமும் அளித்த தல தோனி.. சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்

First Published Oct 17, 2020, 7:21 PM IST

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கியுள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி:பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், துஷார்பாண்டே, ரபாடா, நோர்க்யா.
undefined
சிஎஸ்கே அணியில் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டு, பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டுள்ளார். ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால், பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக கூடுதல் பேட்ஸ்மேனாக கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
சிஎஸ்கே அணி:டுப்ளெசிஸ், சாம் கரன், ஷேன் வாட்சன், ராயுடு, தோனி(கேப்டன்,விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ, கரன் ஷர்மா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
undefined
கேதர் ஜாதவ் இந்த சீசனில் சரியாக ஆடாமல், ஜெயிக்க வேண்டிய போட்டிகளில் கூட வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியாததால் தான் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுத்துள்ளது சிஎஸ்கே அணி. இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும், கேதர் ஜாதவை ஆடும் லெவனில் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரேயொரு போட்டியில் மட்டும் களமிறக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஜெகதீஷன், அந்த போட்டியில் நன்றாகத்தான் ஆடினார். அவருக்குக்கூட வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
undefined
click me!