பிரித்வி ஷா மீது செம கடுப்பான கவாஸ்கர்.. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்றான்..! முன்னாள் வீரர் கடும் தாக்கு

First Published Oct 21, 2020, 7:36 PM IST

பேட்டிங் ஸ்டைலை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்ளாத பிரித்வி ஷாவை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்து வருவதுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
undefined
தொடர் வெற்றிகளை பெற்று, இந்த சீசனில் எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்திவந்த டெல்லி கேபிடள்ஸ் அணி, பஞ்சாப்பிடம் படுதோல்வியடைந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, தவான் 61 பந்தில் 106 ரன்களை குவித்தும் கூட, 20 ஓவரில் வெறும் 164 ரன்கள் மட்டுமே அடித்தது. அதற்கு காரணம் தவானை தவிர அந்த அணியில் யாருமே சரியாக ஆடாததுதான்.
undefined
குறிப்பாக இளம் தொடக்க வீரரான பிரித்வி ஷா, இந்த சீசனின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடினார். ஆனால் கடந்த 4 போட்டிகளில் 2 முறை டக் அவுட்டானதுடன், 4 போட்டிகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து படுமோசமாக சொதப்பிவருகிறார். சூழலுக்கு ஏற்ப, தனது பார்ட்னரின் ஆட்டத்திற்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ளாமல், மோசமாக அவுட்டாகிவருகிறார்.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 11 பந்தில் 7 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தவான் அடித்து ஆடிக்கொண்டிருக்கும்போது, அவசரப்படாமல் நிலைத்து ஆடலாம். ஆனால் அதை செய்யாமல், அவசரப்பட்டு தவறான ஷாட்டுகளை ஆடி அவுட்டாகிவிடுகிறார்.
undefined
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷாவின் மற்றுமொரு சொதப்பலான பேட்டிங்கை கண்டு அதிருப்தியடைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
undefined
பிரித்வி ஷா குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஷிகர் தவான் பஞ்சாப்புக்கு எதிராக அருமையாக ஆடினார். பிரித்வி ஷாவின் பிரச்னை என்னவென்றால், தொடர்ச்சியாக சில போட்டிகளில் ஸ்கோர் செய்யாமல் சொதப்பியபோதிலும், அவர் ஆடும் ஸ்டைலை மாற்றிக்கொள்ளவே மாட்டேன் என்கிறார்.
undefined
வர்ணனையின்போது கவாஸ்கர் செம கடுப்பாகிவிட்டார். நானும் கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன். மறுமுனையில் பார்ட்னர் தவான் அடித்து ஆடும்போது, பிரித்வி ஷா அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தே ஆடினால் போதும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டார் என்று ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
undefined
click me!