உத்தரபிரதேசத்தில் மனிதர்களை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று அந்த மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தெரு நாய்களால் பாதிப்புக்குள்ளாகாத இடங்களே இல்லை எனலாம். குழந்தைகள், பெண்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலைக்கு செல்பவர்கள் நிம்மதியாக வீடு திரும்ப முடியவில்லை.
24
உத்தரபிரதேசத்தில் நாய்களின் அட்டூழியம்
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திலும் இதே கதை தான். அங்கு குழந்தைகளை தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. இந்நிலையில், மனிதர்களை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது ஒருவரை முதன் முதலாக ஒரு தெரு நாய் கடித்தால் அந்த நாய்க்கு கருத்தடை செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.
தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை
பின்பு அந்த நாயின் உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்படு தெருவில் விடப்படும். தொடர்ந்து அந்த நாய் எந்தவித தூண்டுதலும் இன்றி ஒரு மனிதரை இரண்டாவது முறையாக அடித்தால் அந்த நாய் சிறை பிடிக்கப்பட்டு காப்பத்தில் கொண்டு அடைக்கப்படும். வாழ்நாள் முழுவதும் அந்த நாய் காப்பகத்தில் தான் இருக்கும். வெளியே விடப்பட மாட்டாது.
34
கண்காணிப்பு குழு அமைக்கப்படும்
அதே வேளையில் யாராவாது கல்லை தூக்கி எறிந்து ஒரு நாய் அவரை கடித்தால் அது தெரு நாய் கடியாக கருதப்பட மாட்டாது. இது தொடர்பான உத்தரவை முதன்மை செயலாளர் அம்ரித் அபிஜத் பிறப்பித்துள்ளார். உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்த மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆக்ரோஷமான நாய்களை கண்காணிக்க ஒரு கால்நடை மருத்துவர், விலங்குகள் குறித்து அனுபவம் உள்ள ஒருவர் மற்றும் நாய்களின் நடத்தையைப் புரிந்துகொண்ட ஒருவர் மற்றும் நகராட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.
இந்த குழுவினர் மனிதர்களை கடிக்கும் நாய்களை கண்டறிந்து அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுதல், கருத்தடை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் அந்த நாய் எந்தவித தூண்டுதலும் இன்றி ஒருவரை கடித்ததா? இல்லை மனிதர்கள் தொந்தரவு செய்ததால் கடித்ததா? என்பதை கண்டறிவார்கள் என்று உத்தரபிரதேச அரசு கூறியுள்ளது. இது தெரு நாய்க்கடி சம்பவங்களை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தை போல் தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஏதாவது திட்டம் வகுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.