டீ விற்ற சிறுவன் முதல் பிரதமர் வரை... மோடியின் அரிய புகைப்படங்கள்!

Published : Sep 17, 2025, 08:08 AM IST

Modi 75th Birthday Rare Photos: பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை பயணத்தைக் காட்டும் அரிய புகைப்படங்கள் இவை. டீ விற்ற சிறுவன் பிரதமராக உயர்ந்தை இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன.

PREV
17
மோடியின் 75வது பிறந்தநாள்

செப்டம்பர் 17, 1950 அன்று குஜராத்தின் வட்நகர் என்ற சிறிய நகரத்தில் பிறந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இளமைக்காலம் மற்றும் அரசியல் பயணத்தின் சில அரிய மற்றும் இதுவரை பார்த்திராத புகைப்படங்களை இங்கே காணலாம்.

நரேந்திர மோடியின் தந்தை தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி ஒரு தேநீர் கடை நடத்தி வந்தார். அவரது தாயார் ஹீராபென் ஒரு இல்லத்தரசி. இளம் வயதிலேயே தந்தையின் தேநீர் கடையில் மோடி உதவி செய்ததாக கூறப்படுகிறது.

27
ஆர்எஸ்எஸ் பிரசாரகர் மோடி

1972-ல், பாஜகவின் கொள்கை வழிகாட்டியான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பிரசாரகராக மோடியின் அரசியல் பயணம் தொடங்கியது. அவர் முழுநேர ஊழியராக அந்த அமைப்புக்காக உழைத்தார்.

37
பாஜகவில் இணைந்த மோடி

1987-ல் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்த மோடி, தனது கூர்மையான உத்தி மற்றும் திறமையான ஒருங்கிணைப்பு திறன்களால் விரைவாக முன்னேறினார்.

47
குஜராத் முதல்வரான மோடி

2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட மோசமான பூகம்பத்திற்குப் பிறகு, அக்டோபர் மாதம் குஜராத்தின் முதலமைச்சராக மோடி நியமிக்கப்பட்டார்.

57
ஸ்டைலிஷ் மோடி

இது நரேந்திர மோடியின் ஒரு அபூர்வமான புகைப்படம். இந்தப் படம் இளம் வயதில் மோடியின் வேடிக்கையான ஸ்டைலிஷ் தோற்றத்தைக் காட்டுகிறது.

67
சுனிதாவுடன் மோடி

செப்டம்பர் 22, 2007 அன்று, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 195 நாட்கள் தங்கி சாதனை படைத்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை அவர் கெளரவித்தார்.

77
கலாமுடன் மோடி

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் பிரதமர் மோடி இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று, அவர்கள் இருவருக்கும் இடையிலான தனித்துவமான உறவை வெளிப்படுத்துகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories