Prime Minister Modi salary : பிரதமர் மோடி இன்று தனது 75வது பிறந்தாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் மோடிக்கு மாதந்தோறும் சுமார் ரூ.1.66 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. இந்த பணத்தை மோடி எதற்காக பயன்படுத்துகிறார்.? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பிரதமாக தொடர்ந்து 3வது முறையாக பணியாற்றி வரும் நரேந்திர மோடி இன்று ( செப். 17 ) 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
முதல்வராகவும் அதனை தொடர்ந்து பிரதமராகவும் இருக்கும் மோடி, தனது சம்பளத்தை என்ன செய்கிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு ரகசியமாகவே உள்ளது. எனவே அதைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தற்போது தெரிந்து கொள்வோம்.
25
மோடியின் சம்பளம்
பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் சம்பளமாக சுமார் ரூ.1.66 லட்சம் கிடைக்கிறது. இதில் தனக்கு என எந்த வித பணத்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தனது சம்பளத்தில் ஒரு ரூபாயைக் கூட தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்துவதில்லை. அப்படியென்றால் அந்தப் பணத்தை அவர் என்ன செய்கிறார் தெரியுமா.?
35
மோடி சம்பளத்தை என்ன செய்கிறார்.?
பிரதமர் மோடி தனது முழு சம்பளத்தையும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கிறார். குஜராத் முதல்வராக இருந்தபோதும், தனது சம்பளத்தை தொகுதி மக்களின் நலனுக்காகவே செலவிட்டார்.
மக்கள் சேவையே உண்மையான பொறுப்பு என நம்பும் பிரதமர் மோடி, முதல்வராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், தனது வருமானத்தை எப்போதும் நாட்டின் நலனுக்காகவே பயன்படுத்துகிறார். முதல்வராக இருந்த போதும் தனது பயணம், உணவு உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும், இதே போல பிரதமராக இருந்த போதும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. இதன் காரணமாக மோடிக்கு கூடுதலாக எந்தவித பணமும் தேவைப்படாத நிலை உள்ளது.
55
மோடியின் சொத்து விவரம்.?
2024 மக்களவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பிரதமர் மோடிக்கு ரூ.3 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018-19ல் ரூ.11.14 லட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு, தற்போது மூன்று கோடியை எட்டியுள்ளது.