
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது இனி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இந்தப் போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில், தென் கொரிய அதிபருடனான சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு பெரிய போர் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்த போரை நான் உட்பட, உலகின் பல போர்களை நிறுத்தியுள்ளேன். அந்த போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். ஏனென்றால், அந்தப் போரில் ஏற்கெனவே ஏழு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன” என்று தெரிவித்தார்.
தமிழக பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதன்படி, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் 1 அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி ஆகியவை வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக AIWC நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பூச்சிக்கொல்லிகள், நீர் மாசுபாடு போன்றவை இதற்கு முக்கியக் காரணிகள். மின்மினிகளின் அழிவு சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குஜராத் ஆலையில் மாருதி சுஸுகியின் முதல் மின்சார வாகனமான e-விட்டாராவின் உற்பத்தி தொடங்கியுள்ளது. பிரத்யேக EV தளத்தை அடிப்படையாகக் கொண்ட e-விட்டாரா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
தெற்கு ரயில்வேயில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துமாறு இந்திய ரயில்வே புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. டிக்கெட் கவுண்டர்கள், உள் அறிக்கைகள் உள்ளிட்டவற்றில் இந்தி மொழியின் பயன்பாட்டை பிரதானப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இணைப்பு மொழியாக இந்தியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் தென்மாநில ரயில்வே பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரெட்டிட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தான் சமீபத்தில் பார்த்து ரசித்த தமிழ் படத்தை பற்றி கூறி உள்ளார்.
சமீபத்தில் 3BHK படம் பார்த்ததாகவும் அப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது எனவும் சச்சின் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய வெள்ளம் குறித்த விவரங்களை இந்தியா அந்நாட்டுக்குத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். இது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றம் என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த எச்சரிக்கை, பாகிஸ்தானில் பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ், கனமழை மற்றும் வெள்ள முன்னறிவிப்பு காரணமாக ஆற்றுப் படுகைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுமாறு திங்களன்று உத்தரவிட்ட நிலையில் வந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே சோதனைகள் நிறைவடைந்துள்ளன.