இனி 35 மதிப்பெண் வேண்டாம்.! இந்த மார்க் எடுத்தாலே பாஸ்- மாணவர்களுக்கு குட் நியூஸ்!!

Published : Oct 24, 2024, 09:03 AM ISTUpdated : Oct 24, 2024, 09:25 AM IST

 மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 35 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்ற முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

PREV
14
இனி 35 மதிப்பெண் வேண்டாம்.! இந்த மார்க் எடுத்தாலே பாஸ்- மாணவர்களுக்கு குட் நியூஸ்!!
SCHOOL EXAM

மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண்

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வயில் சேர்கின்றனர். அந்த வகையில் ஆண்டு தோறும் நடைபெறும் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்கின்றனர். ஆனால் ஒரு சில மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் கற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கும். இதனால் மாணவர்கள் அந்த பாடத்தில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக கணிதத்தில் பார்முலாவை நினைவிப் வைப்பது, அறிவியலில் ஆராய்ச்சி செய்வதில் ஒரு சில மாணவர்கள் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

24
school exam

அதிகரிக்கும் மாணவர்களின் இடை நிற்றல்

அனால் மற்ற பாடத்தில் கெட்டிக்கார மாணவர்களாக இருப்பார்கள். இருந்த போதும் இந்த கணிதம் மற்றும் அறிவியலில் 100க்கு 35 மதிப்பெண்கள் கூட எடுக்க முடியாமல் திணறும் நிலை உள்ளது. எனவே இந்த இரண்டு பாடங்களுக்காக மாணவர்களின் கல்வி ஆண்டு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பை தொடராமல் இடையிலேயே நிற்க கூடிய நிலை உருவாகும். இதனை கருத்தி்ல் கொண்டே மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 

34
school exam

தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு

அதன் ஒரு பகுதியாக 100க்கு 35 மதிப்பெண்களுக்கு பதிலாக 20 மதிப்பெண்களே எடுத்தாலே தேர்ச்சி என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மஹாராஷ்டிரா அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. அதன் படி கணிதம் மற்றும் அறிவியலில் மாணவர்கள் 20 மதிப்பெண்கள் பெற்றாலே, அவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் இடை நிற்றலை  தடுக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கருத்துத் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 10ஆம் வகுப்பில் இந்த இரண்டு பாடங்களிலும் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வி சேரும்போது தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது என செக் வைத்துள்ளது.

44
SCHOOL EXAM

மாணவர்களுக்கு செக் வைத்த மதிப்பெண்

100-க்கு குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்கள் கலை, வணிகப் பாடங்களை மட்டும் தேர்வு செய்ய முடியும் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவர் சரத் கோசவி கூறுகையில், மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண் திட்டம் உடனடியாக அமலுக்கு வராது. மாநிலம் முழுவதும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது இந்த மதிப்பெண் குறைப்பு திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories