பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்: முதல்வர் உத்தரவு - எத்தனை சிலிண்டர் தெரியுமா?

Published : Oct 24, 2024, 07:38 AM ISTUpdated : Oct 24, 2024, 09:07 AM IST

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தீபாவளி பண்டிகை முதல் அனைவருக்கும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

PREV
15
பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்: முதல்வர் உத்தரவு - எத்தனை சிலிண்டர் தெரியுமா?
Free Cylinder Scheme

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதும் கிராமப்புறங்களில் சமையல் கேஸ் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டது. முன்னதாக தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடுகள்தோறும் இலவசமாக கேஸ் அடுப்பு வழங்கினார். அப்போது முதல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் பயன்பாடு வெகுவாக அதிகரித்தது. மேலும் விறகடுப்பு பயன்படுத்துவதால் அதிகப்புகை வெளியேறி காற்று மாசு ஏற்படுவதாகவும், இதற்கு மாற்றாக கேஸ் அடுப்பு பயன்படுத்த வேண்டும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.

25
Free Cylinder

இதனிடையே சமையல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகம் என்பதால் சிலிண்டரை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வந்தது. பின்னர் பாஜக ஆட்சி காலத்தில் சிலிண்டருக்கான மானியத் தொகை நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களை கவரும் வகையில் இலவச கேஸ், கூடுதல் மானியத்தில் கேஸ் வழங்கப்படுகிறது.

35
Free Cylinder Scheme

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஆந்திரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு பரப்புரை மேற்கொண்டார். இதனை நடைமுறைபடுத்துவது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

45
Free Cylinder Scheme

அதன்படி ஆந்திரா மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாதள்ள மனோகர், தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

55
Free Cylinder

ஏழைபெண்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கும் திட்டம் வருகின்ற 31ம் தேதி தீபாவளி பண்டிகை முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தீபாவளி பரிசாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. அதன்படி 4 மாதங்களுக்கு ஒருமுறை பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். சிலிண்டருக்கான தொகையை செலுத்தி பொதுமக்கள் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும். சிலிண்டர் வாங்கிய 48 மணி நேரத்தில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இதற்கான தொகை வரவு வைக்கப்படும்.

இதன் மூலம் மாநில அரசுக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் ரூ.2,700 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories