இந்தியாவில் இன்ஜின் இல்லாத ஒரே ரயில்! வேகத்தில் ராஜ்தானி, சதாப்திக்கே டஃப் கொடுக்கும்!

First Published | Nov 14, 2024, 2:00 PM IST

இந்தியாவில் இன்ஜின் இல்லாமல் இயங்கும் ரயில் எது தெரியுமா?. ஆனால் ராஜதானி, சதாப்தி போன்ற ரயில்களுக்கு இணையான வேகத்தில் இயங்கும் இந்த ரயில், தானியங்கி முறையில் இயக்கப்படுகிறது.

India's First Engine Less Train

நம்மில் பலரும் நிச்சயம் ஒருமுறையாவது ரயிலில் பயணம் செய்திருப்போம். பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தையே பலரும் விரும்புகின்றனர். வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு போன்ற பல காரணங்கள் இதற்கு இருக்கலாம். இந்திய ரயில்வேயும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. நாட்டில் ராஜதானி, சதாப்தி, துரந்தோ என பல வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இன்ஜின் இல்லாத ஒரு ரயில் நாட்டில் இயங்குகிறது என்று உங்களுக்கு தெரியுமா? 

India's First Engine Less Train

இந்த ரயிலில் இன்ஜின் இல்லை என்றாலும், வேகத்தில் இந்த ரயில் ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுடன் போட்டி போடுகிறது. சோதனை ஓட்டத்தில் எஞ்சின் இல்லாத அதிவேக ரயிலின் வேகம் மணிக்கு 183 கி.மீ., ஆனால் தண்டவாளத்தின் திறன் காரணமாக இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அது வேறு எதுவும் இல்லை. வந்தே பாரத் ரயில் தான் அது. பயணிகள் இந்த அரை அதிவேக ரயிலை மிகவும் விரும்புகிறார்கள். இதற்கு முன் நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்திருக்கலாம், ஆனால் இந்த ரயிலில் இன்ஜின் இல்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. என்ஜின் இல்லை என்றால் அது எப்படி அதிவேக ரயில் ஆனது என்ற கேள்வி மனதில் எழும்.

Tap to resize

India's First Engine Less Train

இந்த ரயில் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும். சென்னையின் இன்டக்ரல் கோச் பேக்டரி (ஐசிஎஃப்) மூலம் உருவாக்கப்பட்ட இந்த ரயில், நாட்டின் முதல் இன்ஜின் இல்லாத ரயில், அதாவது Train 18' ஆகும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களின் வாரிசு என்று அழைக்கப்படுகிறது. வேகம் மற்றும் வசதிகளின் அடிப்படையில், இந்த ரயில் தற்போது நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.

India's First Engine Less Train

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லாத ரயில் ஆகும். இதுவரை இந்திய ரயில்களுக்கு தனி என்ஜின் கோச் உள்ளது, அது பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த வந்தே பாரத் ரயிலில் புல்லட் அல்லது மெட்ரோ ரயில் போன்ற ஒருங்கிணைந்த எஞ்சின் உள்ளது. 

தனி இன்ஜின் இல்லாததால், இந்த ரயிலின் வேகம் அதிகமாக உள்ளது. எஞ்சின் இல்லாத மின்சார ரயிலை இயக்குவதற்கான முழு அமைப்பும் ரயிலின் பெட்டிகளிலேயே பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தேவைக்காக இரண்டு இன்ஜின் பைலட்டுகள் ரயிலில் உள்ளனர்.

India's First Engine Less Train

இந்த ரயில் முற்றிலும் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ரயில் ஆகும்.. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும், ஆனால் தற்போது பாதுகாப்புக் காரணங்களால் ரயில் 130 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. அதிக வேகம் காரணமாக இந்த ரயிலில் பயணிக்க எடுக்கும் நேரம் சுமார் 15 சதவீதம் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!