Most Special Train In India
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாகும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மூலம் பயணிக்கின்றனர். ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் செய்து வருகிறது.
மேலும் பண்டிகை, மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் பல சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது. நாட்டில் ராஜதானி, துரந்தோ, சதாப்தி என பல வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் மிகவும் சிறப்புமிக்க ரயில் எது என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Most Special Train In India
ராஜதானி, துரந்தோ அல்லது ஸ்வர்ன் சதாப்தி என அனைத்து ரயில்களும் இந்த ரயிலுக்கு வழிவிட வேண்டும். அதாவது, விஐபி ரயிலாக இருந்தாலும் சரி, விவிஐபி ரயிலாக இருந்தாலும் சரி, இந்த ரயிலுக்கு வழிவிட வேண்டும். 'வந்தே பாரத்' என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு. ஆம். இந்த ரயிலைக் கடந்து செல்வதற்காக 'வந்தே பாரத்' கூட நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த ரயிலின் பெயர் என்ன? அது தான் இந்தியாவின் விபத்து நிவாரண ரயில்.
ரயில்களில உள்ள M1 பெட்டியில் என்ன ஸ்பெஷல் இருக்கு?
Most Special Train In India
இந்தியாவின் விபத்து நிவாரண மருத்துவ ரயில்
நாட்டில் வேறு எந்த ரயிலுக்கும் வழிவிடாத ஒரே ரயிலுக்கு விபத்து நிவாரண மருத்துவ ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஓடும் போது, அது எந்த ரயிலாக இருந்தாலும், விபத்து நிவாரண ரயிலுக்கு வழிவிட வேண்டும். இந்தியாவில் எங்காவது ரயில் விபத்து ஏற்பட்டால், மருத்துவ வசதிகளை விரைவில் வழங்க இந்த ரயில் செயல்படுகிறது.
இந்த ரயிலில் நவீன கருவிகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளன. மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், ரயிலில் டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவும் உள்ளது.
Most Special Train In India
இந்த ரயில்கள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். அவை இந்திய ரயில்வேயின் முக்கியமான யார்டுகள் மற்றும் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.. ரயில் விபத்து ஏற்பட்டால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்த ரயில் விபத்து நடந்த இடத்தை மிகக் குறுகிய நேரத்தில் சென்றடைகிறது. எனவே, இந்த ரயிலை விபத்து நடந்த இடத்திற்கு விரைவில் கொண்டு வர மற்ற ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.
RAC டிக்கெட் கிடைத்தாலும் வெயிட் லிஸ்டுக்கு மாறலாம்! காரணம் இதுதான்!