M1 Coach in Trains
இந்திய ரயில்களின் அனைத்து பெட்டிகளும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. அவற்றில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப, வெவ்வேறு குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ரயில்களில் M1 குறியீடு கொண்ட பெட்டிகள் மற்ற பெட்டிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
S Coach
இருக்கை எண்ணில் S என்று இருந்தால் அது ஸ்லீப்பர் கோச் என்று அர்த்தம். அதேபோல், டிக்கெட்டில் B1 அல்லது B2 என்று எழுதப்பட்டிருந்தால், உங்கள் டிக்கெட் மூன்றாவது ஏசி பெட்டியில் உள்ளது என்று அர்த்தம்.
M1 Coach
M குறியீடு 3 டயர் எகானமி ஏசி பெட்டியைக் (ஏசி-3) குறிக்கிறது. M1 பெட்டியில் இருக்கும் வசதிகள் எல்லாம் பெரும்பாலும் 3 டயர் ஏசி பெட்டியில் இருப்பதைப் போலவே உள்ளன.
M1 Coach Trains
3 டயர் ஏசி கோச்சுடன் ஒப்பிடும்போது, M என்ற குறியீட்டு கொண்ட கோச்சின் வசதி மற்றும் கட்டணம் குறைவாக உள்ளது. இந்த பெட்டிகள் ஒரு சில ரயில்களில் மட்டுமே சேர்க்கப்படுகின்றன.
M1 Coach vs AC III Tier
3 டியர் எகானமி ஏசி கோச்சில் 72 இருக்கைகள் இருக்கும். ஆனால் M1 பெட்டியில் 83 இருக்கைகள் இருக்கும் என்பது இதன் சிறப்பு. மேல் பெர்த்திற்கு ஏற வசதியான படிக்கட்டுகளும் இருக்கும்.
M1 Coach Berths
இரண்டு லோயர் பெர்த், இரண்டு மிடில் பெர்த், இரண்டு அப்பர் பெர்த், இரண்டு சைடு பெர்த் (லோயர், அப்பர்) என 3 அடுக்கு ஏசி கோச்சில் உள்ளது போன்ற பெர்த் அமைப்பு M1 கோச்சிலும் இருக்கும்.
A, D Coaches
இதேபோல A கோச் என்றால் இரண்டாவது ஏசி வகுப்பில் இருப்பதைக் குறிக்கும். அதேசமயம், D என்று குறிப்பிட்டிருந்தால் இரண்டாவது இருக்கை வகுப்பு கோச்சின் டிக்கெட் என்று அர்த்தம்.