RAC டிக்கெட் கிடைத்தாலும் வெயிட் லிஸ்டுக்கு மாறலாம்! காரணம் இதுதான்!

First Published | Nov 13, 2024, 9:54 AM IST

பண்டிகை நாட்களில் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்காக பல்வேறு மண்டலங்களுக்கு பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருந்தாலும் பலருக்கு வெயிட் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடைத்தும், அவை உறுதியாகாத காரணத்தால் பயணிகள் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

Railway Rules

இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தால் ரயிலில் பயணம் செய்வது நல்லது என்று மக்கள் கருதுகின்றனர். பண்டிகை நாட்களில் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்காக பல்வேறு மண்டலங்களுக்கு பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருந்தாலும் பலருக்கு வெயிட் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடைத்தும், அவை உறுதியாகாத காரணத்தால் பயணிகள் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

RAC

டிக்கெட் உறுதி செய்யப்படாமல் போவது பொதுவான விஷயம். ஆனால் RAC டிக்கெட் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று தெரியுமா? இது குறித்து கமலேஷ் சுக்லா என்ற நபர் ரயில்வேயில் புகார் அளித்தார். நவம்பர் 20ஆம் தேதி காசியாபாத்தில் இருந்து தியோரியா சதாருக்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். டிக்கெட் புக் செய்யும் போது RAC 42 டிக்கெட் கிடைத்தது. ஆனால் சிறிது நேரம் கழித்து அவரது டிக்கெட் வெயிட் லிஸ்டுக்கு மாறிவிட்டது (GNWL 63). இந்தத் தகவலை எகஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

Latest Videos


Indian Railways

இந்திய ரயில்வே தனது ரயில்வே சேவா கணக்கில் இருந்து, சுக்லாவின் புகாருக்கு பதிலளித்தது. அதில், சுக்லா தனது தொடர்பு எண்ணை indianrailways.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ தனிப்பட்ட மெசேஜ் மூலமாகவோ பகிரும்படி ரயில்வே கோரியது. அல்லது 139 என்ற எண்ணிற்கு டயல் செய்து பகிருமாறு கேட்டுக்கொண்டது. கமலேஷ் சுக்லா, ரயில்வே சொன்னபடி தனது மொபைல் எண்ணைப் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரை நீங்கள் கண்காணிக்கலாம் என்று சுக்லாவுக்குத் தெரிவித்தது.

Reservation Against Cancellation

இந்திய ரயில்வேயில் பயணம் செய்வது ஒரு வசதியான அனுபவம். ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆர்.ஏ.சி.யில் (ரிசர்வேஷன் அகென்ஸ்ட் கேன்சலேஷன்) டிக்கெட் கிடைத்தாலும், அது வெயிட் லிஸ்டுக்குச் செல்கிறது என்று அடிக்கடி பயணிகள் புகார் கூறுகின்றனர். தொழில்நுட்ப காரணங்களால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது. ரயில்வேயும் தனது தவறை ஏற்றுக்கொண்டுள்ளது.

Wait List Ticket

ரயில்வேயில் 7 வகையான காத்திருப்பு டிக்கெட்டுகள் உள்ளன. GNWL, RLWL, PQWL, TQWL, RSWL, RAC. இதில் RAC என்பது ரத்துக்கு செய்யப்பட்ட டிக்கெட்டை நிரப்புவதற்கான ஒதுக்கீடு ஆகும். RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணி ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் முழு பெர்த் வழங்கப்படுவதில்லை. இன்னொருவருடன் தனது இருக்கையைப் பகிர்ந்துகொண்டு ஒரு பெர்த்தில் அமரலாம். அதே நேரத்தில், ஒரு பயணி ரயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட்டை ரத்து செய்தால், அந்த RAC பயணியின் டிக்கெட் உறுதிசெய்யப்பட்டு அவருக்கு முழு பெர்த் கிடைக்கும்.

RAC ticket confirmation

சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, RAC டிக்கெட் திடீரென வெயிட் லிஸ்ட் பட்டியலுக்குச் செல்லும். முக்கியமாக, சாஃப்ட்வேர் அப்டேட், சர்வர் சிக்கல்கள் போன்ற தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இந்த சிக்கல் ஏற்படுகிறது. சமீபத்தில், இது குறித்து ரயில்வே தனது கணக்கில் பதிவிட்டுள்ளது. அதில் தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. பயணிகள் இதுபோன்ற தேவையற்ற அசௌகரியங்களுக்கு ஆளாகாத வகையில், தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

click me!