முதல் முறையாக ஆர்மீனியாவுக்கு ஆகாஷ் பேட்டரியை வழங்கிய இந்தியா
இந்தியா தனது முதல் ஆகாஷ் ஆயுத அமைப்பு பேட்டரியை ஆர்மீனியாவிற்கு அனுப்பியுள்ளது. அசர்பைஜானுடனான தற்போதைய பதட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டின் பாதுகாப்பு திறன்களை இது மேம்படுத்துகிறது.
இந்தியா தனது முதல் ஆகாஷ் ஆயுத அமைப்பு பேட்டரியை ஆர்மீனியாவிற்கு அனுப்பியுள்ளது. அசர்பைஜானுடனான தற்போதைய பதட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டின் பாதுகாப்பு திறன்களை இது மேம்படுத்துகிறது.
இந்தியா தனது முதல் ஆகாஷ் ஆயுத அமைப்பு பேட்டரியை ஆர்மீனியாவிற்கு அனுப்பியுள்ளது. அசர்பைஜானுடனான தற்போதைய பதட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டின் பாதுகாப்பு திறன்களை இது மேம்படுத்துகிறது.
தனது பாதுகாப்பு ஏற்றுமதி திறனை காட்டும் வகையில், இந்தியா திங்கள்கிழமை (நவம்பர் 11) முதல் ஆகாஷ் ஆயுத அமைப்பு பேட்டரியை ஆர்மேனியாவுக்கு அனுப்பியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) இணைந்து இதனை உருவாக்கியது. ஆகாஷ் ஆயுத அமைப்பின் ஒவ்வொரு பேட்டரியும் ஒரு ராஜேந்திரா 3D ரேடார், மூன்று லாஞ்சர்கள், நான்கு ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
ஆகாஷ் என்பது போர் விமானங்கள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் வானில் இருந்து தரையிறங்கும் ஏவுகணைகள் உட்பட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் ஏவுகணை பாதுகாப்பு (SAM) அமைப்பாகும்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தி செயலர், சஞ்சீவ் குமார், முதலாவது ஆகாஷ் ஆயுத அமைப்பு பேட்டரியை ஆர்மேனியாவுக்கு அனுப்பும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை பிரதிபலிக்கிறது என்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில், 6,000 கோடி மதிப்பிலான 15 ஆகாஷ் ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்தியாவுடன் ஆர்மேனியா ஒப்பந்தம் செய்தது. இந்தியாவிடம் இந்த ஏவுகணை அமைப்புகளை வாங்கும் முதல் நாடு ஆர்மேனியா.
கண்காணிப்பு ரேடார்கள், ஏவுகணை வழிகாட்டுதல் ரேடார்கள் மற்றும் C4I அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்களை BEL வழங்கியுள்ளது.
ஆர்மேனியாவைத் தவிர வியட்நாம், எகிப்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவின் ஆகாஷ் ஆயுத அமைப்பை வாங்குவது தொடர்பாக விருப்பம் தெரிவித்துள்ளன. இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் ஏற்கனவே ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தியுள்ளன.
ஆர்மேனியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. 2011 முதல் 2020 வரை ஆர்மேனியாவின் ஆயுத இறக்குமதியில் 94 சதவீதம் ரஷ்யாவைச் சேர்ந்ததாக உள்ளது.
ஆர்மேனியா - அசர்பைஜான் மோதலுக்கு மத்தியில், ஆர்மேனியா தனது பாதுகாப்புத் திறனை கணிசமாக மேம்படுத்த முயற்சி செய்கிறது. உக்ரைனுக்கு எதிராக நடந்துவரும் போர் காரணமாக மாஸ்கோவுடன் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக ஆர்மேனியா மாற்று ஆயுத சப்ளையர்களை நாடியுள்ளது.