ரயில்வே ஸ்லீப்பிங் பாட்! ரயில் பயணிகளுக்கு குறைந்த செலவில் தங்குமிட வசதி!

First Published | Nov 14, 2024, 12:04 PM IST

இந்திய ரயில்வேயில் ஸ்லீப்பிங் பாட் என்ற வசதியைப் பற்றித் தெரியுமா? ரயில் பயணிகளுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான வாடகையில் தங்குமிட வசதியை வழங்கும் ரயில்வே சேவை குறித்து இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளவோம்.

Sleeping Pods

ஸ்லீப்பிங் பாட் என்பது ஓய்வெடுப்பதற்கான வசதிகளுடன் கூடிய ஒரு சிறிய அறை ஆகும். தூங்குவதற்கு படுக்கை, தலையணை, போர்வை வசதிகள் இருக்கும். குளியலறை மற்றும் கழிப்பறை வசதியையும் உள்ளடக்கியதாக இருக்கும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கிக்கொள்ள இந்த ஸ்லீப்பிங் பாட் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக, விமான நிலையங்களில் காணப்படும் இந்த வசதி இப்போது ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் வந்துள்ளது.

Chennai Central Railway Station

ஜனவரி 2024இல் தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்லீப்பிங் பாட் சேவை தொடங்கப்பட்டது. சென்டரல் ஸ்டேஷனில் 6வது பிளாட்பார்ம் அருகில் உள்ள பிரதான வளாகத்தில் ஸ்லீப்பிங் பாட் லவுஞ்ச் இருக்கிறது. இதில் 180 பயணிகள் வரை தங்குவதற்கான வசதி உள்ளது.

Tap to resize

Sleeping pods in Chennai

112 ஒற்றை சோஃபாக்கள், 10 ரிக்ளைனர்கள் உள்ளன. கூடுதலாக 18 சிங்கிள் ஸ்லீப்பிங் பாட், 4 டபுள் ஸ்லீப்பிங் பாட் உள்ளன. இவை தனியாகவும் குடும்பத்துடனும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்குவதற்கு வசதியான இடத்தை குறைவான செலவில் வழங்குகின்றன.

இங்கு சைவம் மற்றும் அசைவ உணவுகளும் கிடைக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிவறைகள், குளிப்பதற்கும் உடை மாற்றுவதற்கும் பிரத்யேக இடங்கள், தனித்தனி லக்கேஜ் ரேக்குகள் ஆகிய கூடுதல் வசதிகளும் உள்ளன.

Railway Station Sleeping Pods

ஒரு மணிநேரம் தங்குவதற்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்த ஒரு மணிநேரத்தில் பயணிகளுக்கு டீ அல்லது காபி வழங்குகிறார்கள். இத்துடன் இலவச Wi-Fi வசதியும் கிடைக்கும்.

ஒரு நபர் தங்குவதற்கான ஸ்பீப்பிங் பாடில் 3 மணிநேரம் தங்குவதற்கு ரூ.840 வாடகை பெறப்படுகிறது. இதில், ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு வெல்கம் டிரிங்க், இலவச Wi-Fi, ஒரு போர்வை, தலையணை மற்றும் படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும். தங்கியிருக்கும் காலத்திற்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபடும்.

Trichy Railway Station Sleeping Pod

திருச்சி ரயில் நிலையத்திலும் இதேபோன்ற ஸ்லிப்பிங் பாட் சேவை செயல்பட்டு வருகிறது. திருச்சியில் சென்னையைவிட குறைந்த கட்டணம் பெறப்படுகிறது. இங்கும் ஸ்லீப்பிங் பாட்களுக்கு தங்கும் நேரத்தைப் பொறுத்து கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், ஒரு மணிநேரத்திற்கான கட்டணம் ரூ.99 தான்.

இரண்டு மணிநேரத்துக்கு ரூ.170, மூன்று மணிநேரத்துக்கு ரூ.210, 6 மணிநேரத்துக்கு ரூ.360 மற்றும் 12 மணிநேரத்துக்கு ரூ.499 வாடகை பெறப்படும். ஒரு நபர் அல்லது இரண்டு நபர் தங்குவதற்கான ஸ்லீப்பிங் பாட்கள் உள்ளன. லவுஞ்சில் ஒரு குடும்ப அறை, ஓய்வெடுக்கும் லவுஞ்ச், குளியல் மற்றும் கழிப்பறை வசதிகள், உடை மாற்றும் அறை போன்ற வசதிகளும் உள்ளன.

Railway Station Services

ஸ்பீப்பிங் பாட்களை பயன்படுத்த சில விதிமுறைகளும் உள்ளன. ரயிலில் பயணித்த அல்லது பயணிக்க இருக்கும் நபர்கள் மட்டும்தான் இந்த ஸ்லீப்பிங் பாட் சேவையை பயன்படுத்த முடியும்.

பயணிகள் ஸ்பீப்பிங் பாட்களை பயன்படுத்த தங்கள் ரயில் டிக்கெட்டின் PNP நம்பரை வழங்க வேண்டும். ரயிலில் பயணம் செய்யாத நபர்கள் இந்த தங்குமிட வசதியை பயன்படுத்த முடியாது. மேலும் அதிகபட்சமாக 48 மணிநேரத்திற்கு மட்டும்தான் இந்த ஸ்பீப்பிங் பாட்களில் தங்க முடியும்.

Latest Videos

click me!