மேலும் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, ஆ.ராசா மற்றும் திருச்சி சிவா ஆகியோரும் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''மன்மோகன் சிங் மன்மோகன் சிங் மறைவு காங்கிரசுக்கு மட்டும் அல்ல; ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரிழப்பாகும்.
மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு உயர்த்தியவர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டின் உள்கட்டப்புமைகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்துள்ளார். மதுரவாயல் திட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலைகள் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர்.