8.3 கோடி ஆர்டர்கள்! ஸ்விக்கியில் பிரியாணி தான் மீண்டும் நம்பர் 1!

Published : Dec 24, 2024, 11:27 PM IST

Biryani Orders on Swiggy: ஸ்விக்கி உணவு டெலிவரி செயலி மூலம் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக மீண்டும் பிரியாணியே முதல் இடம் பிடித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 83 மில்லியன் ஆர்டர்கள் வந்திருப்பதாக அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.

PREV
16
8.3 கோடி ஆர்டர்கள்! ஸ்விக்கியில் பிரியாணி தான் மீண்டும் நம்பர் 1!
Biryani Orders on Swiggy

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 2024ஆம் ஆண்டிற்கான ஆண்டு இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை உணவு ஆர்டர் தொடர்பான சில சுவாரஸ்யமான போக்குகளை வெளிப்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் நவம்பர் 22 வரை 83 மில்லியன் ஆர்டர்களுடன் பிரியாணி அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக உள்ளது.

26
Swiggy Biryani

பிரியாணி ஆர்டர்களின் எண்ணிக்கையை நகரம் வாரியாகப் பார்க்கும்போது ஹைதராபாத் 9.7 மில்லியன் ஆர்டர்களுடன் முன்னணியில் உள்ளது. பெங்களூரு (7.7 மில்லியன்), சென்னை (4.6 மில்லியன்) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

36
Biryani Orders

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சுமார் 6 மில்லியன் பிரியாணி பிளேட்கள் ஸ்வீக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது. மற்றொரு சுவாரசியமான அம்சமும் உள்ளது. 12 முதல் 2 மணி வரை இரவு நேர பசிக்காக ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பிரியாணி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த லிஸ்டில் சிக்கன் பர்கர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

46
Swiggy 83 million orders

பிரியாணி ரயில்களிலும் அடிக்கடி ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. ஸ்விக்கி ஐஆர்சிடிசியுடன் இணைந்து உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது. இந்த சிறப்பு வசதியின் மூலம் ரயில் வழித்தடங்களில் பயணிகளுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

56
Swiggy most favorite food 2024

2024ஆம் ஆண்டில், சிக்கன் ரோல்ஸ் 2.48 மில்லியன் ஆர்டர்களுடன் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட சிற்றுண்டி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது. பலரும் விரும்பும் சிக்கன் மோமோஸ் 1.63 மில்லியன் ஆர்டர்களைப் பதிவுசெய்துள்ளது. உருளைக்கிழங்கு பொரியல் வகைகள் 1.3 மில்லியன் ஆர்டர்கள் வந்துள்ளன.

66
Biryani Swiggy Record

ஸ்விக்கியில் மட்டும் பிரியாணி நம்பர் ஒன் உணவாக இல்லை. கடந்த ஆண்டு, ஜோமேட்டோ (Zomato) நிறுவனம் வெளியிட்ட, 2023ஆம் ஆண்டிற்கான ஆண்டு இறுதி அறிக்கையிலும், பிரியாணிதான் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக இருந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories